பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்



பிராமணரல்லாதாருக்கே வேலை கொடுக்க வேண்டுமென்றும், பிராமணர்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாதென்றும், அய்க்கோர்ட் சர்க்குலர்களும், கவர்ன்மெண்ட் ஆர்டர்களும் இருந்தும், அவைகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை திருச்சி, தஞ்சாவூர் ஜில்லாக்களிலிருந்து இந்த ஜில்லாவுக்கு இறக்குமதி செய்து வருகிறார்கள்.  சமீபமாக ஏற்பட்ட வகுப்புவாரி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற ஜி.ஓ. வை குயுக்தியாக அர்த்தம் பண்ணி தங்கள் டிபார்ட்மெண்டுக்கு அமலுக்கு வரவில்லையயனச் சொல்லி விட்டார்கள்.  வரு­த்தில் பெயரளவில் சில பிராமணரல்லாதாருக்கு ஒரு மாச, இரண்டு மாசத்தில் வேலை போட்டு விரட்டிவிட்டு, நீடித்த பதிலையும், பர்மனெண்டு வேலைகளையும் பிராமணர்களுக்கே போட்டு தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

8 வரு­ம் 10 வரு­ங்களுக்கு முன்னதாகவே இந்த டிபார்ட்மெண்டில் நிலைத்து ஆக்டிங் பார்த்து வரும் பார்ப்பனரல்லாதாரின் சர்வீஸைக் கவனித்தால் 2,3 வரு­ம் தானிருக்கும்.  ஏனெனில் வரு­த்தில் 4 மாசம் தான் பதில் போட்டிருப்பார்கள்.  சமீப காலத்தில் வந்த பிராமணன் தொடர்ச்சியாக 2 அல்லது 3 வரு­ம் பதில் பார்த்துவிட்டு, பிராமணரல்லாதாருக்கு சீனியர் என வந்து விடுவான்.  இப்பிராமணர்களுக்கே வேலைகளும் பெர்மணன்டாகி விடும்.  ஆதலால், பிராமணரல்லாத ஒருவன் 10 வரு­ங்களுக்கு முன்பு இருந்து ஆக்டிங் பார்த்து வந்தாலும் சீனியராக மதிக்கப்பட மாட்டான்.  தொடர்ச்சியாக ஆக்டிங் வேலையும் கிடையாது.  காயமான உத்தியோகம் கிடைப்பதரிது.  சிலருக்கு இந்த ஆக்டிங் வேலையுங்கூட போடுவதில்லை.  சீனியர் பிரகாரம் சர்வீசைக் கவனித்து வேலை போடுவதாகச் சொல்லுவார்கள்.  திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத புதிய பிராமணர்களுக்கு பெர்மென்டாக உத்தியோகங்கள் போட்டுவிடுவார்கள்.  இவ்விதமே இதுவரை எத்தனையோ புதிய புதிய பார்ப்பனர்களுக்கு வேலை போட்டுக் கொண்டு வருகிறார்கள்.  அப்பொழுது சீனியாரிட்டி என்பதையே மறந்து விடுவார்கள்.  இவர்கள் செய்யும் அநீதியை மேல் உத்தியோகஸ்தர்களுக்குத் தெரிவித்தால் அவர்களுக்கு வேண்டிய கெடுதியைச் செய்வார்கள்.  ""பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடு'' என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் ""பிராமணர்களுக்கு மட்டும் உத்தியோகம்'' என கோர்ட் வாசல்களில் போர்டுதான் போடாத குற்றம்.  போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லாதாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள்.  சுயமரியாதையுள்ள எந்த மனிதனும் இதைச் சகிக்க முடியுமா?

சென்ற 10 வரு­ங்களாக எத்தனை பிராமணரல்லாதாருக்கும், பிராமணர்களுக்கும் பெர்மனென்டாக வேலை போட்டிருக்கிறார்கள்.  சென்ற 10 வரு­ங்களாக இந்த ஜில்லாவில் ஜட்ஜுகளும், சிரஸ்தார்களும் மற்ற உத்தியோகஸ்தர்களும் பிராமணர்களாகவே இருந்து வருகிறார்கள்.  சென்ற மாதம் இராமநாதபுரம் ஜில்லா கோர்ட்டிலும், சிவகங்கை சப் கோர்ட்டிலும் திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத 2 பார்ப்பனர்களுக்கு பெர்மனென்டாக அமினா வேலை போட்டிருக்கிறார்கள்.  8 வரு­ம் 10 வரு­ங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆகிறது.  மேற்படி நியமனங்களை ரத்து செய்து பிராமணரல்லாதாருக்குப் போடும்படியாக அய்க்கோர்ட்டாரையும், கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்த ஜில்லாவில் 4,5 அமினா வேலைகள் பர்மனெண்டாக காலியாக இருக்கிறது.  இவைகளையாவது பிராமணரல்லாதாருக்குக் கொடுப்பார்களா?  அல்லது அக்கிரகாரத்திலுள்ளவர்கள் தான் உரித்தானவர்களெனச் சொல்லப் போகிறார்களா?

கவர்ன்மெண்டாரும், அய்க்கோர்ட்டாரும் கிருபை செய்து பிராமணரல்லாதாரின் குறைகளை நீக்கி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைச் சீக்கிரமாக அமலுக்குக் கொண்டுவந்து உதவியற்றுத் தவிக்கும் பிராமணரல்லாதாரை ரட்சிக்கும் படியாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

- குடிஅரசு, 23.06.1935

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பார்ப்பனர்கள் கடைசி மூச்சு உள்ளவரை இறங்கி வர மாட்டார்கள்


- அன்னை .வெ.ரா.மணியம்மையார்

நமது அய்யா அவர்கள் இறுதிப் போராட்டம் என்று நமது இன இழிவை ஒழிக்கும் போராட்டத்தை அறிவித்தார்கள்.

அந்தப் போராட்டம் வெற்றி பெறும் தருவாயில் நமது அய்யா அவர்கள் மறைந்து விட்டார்கள்.

அதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும். நம் தோழர்கள் அதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது, தோழர்கள் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொண்டு சிதைந்து விடுவார்கள் என்றெல்லாம் நம் இன எதிரிகள் - பார்ப்பனர்கள் கருதினார்கள்.

அய்யா மறைந்ததற்காகப் பார்ப்பனர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.

அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் உயிரோடிருந்தது உங்களுக்கு எல்லாம் கவசம்போல. அந்தக் கவசம் இன்றையதினம் போய்விட்டது என்பதை நீங்கள் உணரத்தான் போகின்றீர்கள். அந்தக் கவசம் இல்லையே என்று ஏங்க வேண்டிய நிலைமைதான் உங்கள் நிலைமை!

நம் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் கடைசி மூச்சு உள்ளவரை இறங்கிவர மாட்டார்கள். இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற கட்டம் வந்தால்தான் கீழே இறங்குவார்கள். அதை நினைவில் கொண்டு நாம் காரியம் ஆற்ற வேண்டும்.


(விடுதலை 2.2.1974)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆரியம் ஓர் நயவஞ்சக நாசீசம்

 பார்ப்பன ஆதிக்கம் என்றால் உடனே பரங்கி, உத்தியோகத்திலே, நாம் பங்கு கேட்கிறோம் என்று குள்ளக் கருத்துடன் கூத்தாடுகின்றனர். பார்ப்பன ஆதிக்கம் என்றுரைக்கும் போது உத்தியோக மண்டலத்திலே அவர்கள் ஆட்சி செலுத்துவதை மட்டுமல்ல, நாம் குறிப்பது.

ஜாதியிலே உயர்வு, சமயத்திலே தரகு, சமுதாயத்திலே பாடுபடாத வாழ்வு, பொருளாதாரத்திலே சுரண்டல் கொள்கை, மதத்துறையிலே மடமையை வளர்க்கும் கொடுமை, கல்வித் துறையிலே கற்றோரையும் கசடராக்கும் குரூரம், அரசியலிலே ஆங்கிலேயரை மிரட்டுவதாகக் கூறிக்கொண்டு பேரம் பேசும் போக்கு, வாழ்க்கைத் துறையிலே இகம், பரம் என்று பிரித்துப் பேசி, உலகம் மாயை என்றுரைத்து வாழ்வு அநித்தியம் என்று வேதாந்தம் போதித்து, மக்களை, எருமை இயல்பு, கொண்டோராக்கும் கோரம், இன்னோரன்ன பிறவற்றையே நாம் குறிப்பிடுகிறோம். உத்தியோக மண்டல விசயம் இதிலே ஓர் ஒதுக்கிடம். முழுவதும் அதுவல்ல. ஊராள்வோரின் உறவினரான மெயிலுக்கு. உத்தியோக விசயமட்டுமே கண்ணை உறுத்துகிறது, பிறவற்றைக் காணக் கண் இல்லை.

ஆரியம் ஓர் நயவஞ்சக நாசீசம். பசப்பும் பாசீசம், ஜாலம் பேசிடும் ஜார், சீலம் என்றுரைத்துத் தமிழ்ச்சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக வல்லரசு, இளித்தவாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச் சவாரி செய்யும் ஏகாதிபத்தியம். தாசர் கூட்டத்தை உண்டாக்கி, அதற்குத் தரகுத் தொழில் செய்யும் தந்திரயந்திரம்.


( அண்ணா திராவிடநாடு 3.5.42 பக்கம் 12)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

அப்பர் சுவாமிகளும், பார்ப்பனர்களும்


- கைவல்யம்

சூத்திரன் என்றால் பலபடி தாழ்த்தியே ஸ்மிருதி, இதிகாசப் புராணங்களிலெல்லாம் எழுதப்பட் டிருப்பதை, சைவர்கள் கூட்டம் உணராவிட்டாலும், பண்டிதன் அறிவான். அந்தக் காரணத்தைக் கொண்டல்லவா அப்பர் சுவாமிகளை சூத்திரன் என்று அவருக்கு வேத பாராயணம் சொல்ல இன்னும் பார்ப்பான் மறுக்கிறான். தமிழ் மறை என்று சைவர்களால் போற்றப்படும் தேவாரத்தை சிவபெருமானுக்கு முன்னாலும், நடுவிலும் ஓதமறுப்பதற்கு சூத்திர பாஷை என்பதுதானே காரணம். அப்பர் சுவாமிகளுக்கு சாதம் வைத்துப் படைப்பதில் பல புரட்டுகள். பார்ப்பனர்களுக்குப் பரிந்து பேசும் பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவ்வுணர்ச்சியை அவர்கள் வயிற்றுப் பிழைப்பு மறைத்துவிடுகிறது. இன்னும் ஆழ்ந்து கவனித்தால் அப்பர் சுவாமிகளின் விக்கிரகத்தை மற்ற பார்ப்பன விக்கிரகத்திற்கு சற்று அப்பால் தள்ளி வைத்திருப்பது தெரியும். இதற்கு சூத்திரன் என்பதுதானே காரணம்.


- குடிஅரசு 16.6.29

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பான் ஜாதி புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் - டாக்டர் டி.எம்.நாயர்



எத்தோப்பியன் (நீக்ரோ) தனது நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் மட்டும் தனது இன குணத்தை (ஜாதி புத்தியை) மாற்றிக் கொள்ளவே மாட்டான்.

(The Ethiopian may change this skin. Leopard its spots, but the Brahmin will not change his clannishness)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆரியத்தால் தமிழர்க்கு நேர்ந்த தீங்குகள்


- ஞா.தேவநேயப்பாவாணர்

பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரக் கல்வியும், நாகரிகமின்மை, தாய்மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன ஆரியத்தால் தமிழர்க்கு நேர்ந்த தீங்குகளாகும். ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.

பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப்புலவர் பிழைப்பும் கெட்டனதாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக்குளங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிரகார வழியாகச் செல்லக்கூடா தென்றும், மேலாடையணியக் கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில் இருந்து வருகின்றது. மேல்வகுப்பாரைக் கண்டவுடன் அய்ம்புலனும் ஒடுங்கி, அவர் ஏவல் வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்?

பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்து கிடக்கின்றனர் கீழோர். மேனாட்டாருக்குச் சமையல் செய்யும் பறையர், மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.

ஆரிய - திராவிடப் போர் தொன்றுதொட்டதாதல்
ஆரிய - திராவிடப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த் தமிழர்க்குள், பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்டதென்றும், அடிமைத் தமிழரான நீதிக்கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆரிய - திராவிடப் போர், ஆரியர் இந்தியாவில் கால் வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும்.

பிராமண மதத்திற்கு மாறாக பவுத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே. பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்து கொண்டேயிருந்தது.


ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவரது முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை நெடுகக் காணலாம்.                 

    - (ஒப்பியன் மொழி நூல் பக்கம் 65 - 66)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

மறைமலை அடிகள்


தமிழ் மக்கள் எல்லார்க்கும் தொடர்பாகத் தீது புரிந்து வரும் பார்ப்பனரை நஞ்சினுங்கொடியராக நினைந்து அவர் எவ்வகையிலும் நம்பால் அணுகுதற்கு இடந்தராது விழிப்பாயிருத்தலே தமிழர் ஒவ்வொருவரும்  கருத்தூன்றிக் கைக்கொள்ளற் பாலதாகிய முதற் பெருங்கடமையாகும்.                                                  

 - மறைமலை அடிகளார் 
வேளாளர் நாகரிகம் - பக் 87

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்


ஆர்தர்மைல்ஸ்


ஆங்கிலக் கல்வி கற்றுப் பெரிய உத்தியோகங்களிலே உள்ள பார்ப்பனர் தங்கள் ஜாதி ஆச்சாரத்திலும் வழுவியவர்களாகவே மேலுக்குக் கருதப்படுவார்கள். அந்தரங்கத்தில் அவர்கள் பார்ப்பனர்களாகவே இருப்பார்கள்

என ஆர்தர்மைல்ஸ் என்ற ஆங்கில நூலாசிரியர் தாம் எழுதிய Land of the Lingham”  என்ற நூலில்.

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பனர்கள் பற்றி விவேகானந்தரின் கருத்துகள்

(திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் 1983 இல் வெளியிட்டுள்ள The Man Making Message of Vivekananda for the use college students”  என்கிற புத்தகத்திலிருந்து)

ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதைக் கொடு (ழுஎந நஎநசல அய ளை னரந) என்கின்ற பழைய ஆங்கிலப் பழமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, என் நண்பர்களே வெவ்வேறு ஜாதியர்களுக்கிடையே சண்டையால் பலன் ஒன்றும் இல்லை. இத்தகைய சண்டைகள் நம்மை மேலும் பலவீனப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு என்று இருந்த தனி உரிமைகள் மற்றும் சலுகைகள் போய்விட்டன. என்றென்றைக்குமாக இந்திய மண்ணிலிருந்து போய்விட்டன. இது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட நல்ல பலன்களில் ஒன்றாகும். (பார்ப்பனர்களை சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்) ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று இருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம் ஆட்சியானது முழுதும் கெட்டது என்று சொல்ல முடியாது; எதுவுமே முழுதும் கெட்டதாக இருப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தியாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது (பார்ப்பனிய கொடுமைகளிலிருந்து). எனவேதான் (வட இந்திய மக்களில்) அய்ந்தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மதமாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல. வாளும், நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சநிலையாகும். 20 விழுக்காடிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவிவிடுவார்கள்.

  நீங்கள் அவர்களது குறைகளைக் களையவில்லையானால், நான் மலபாரில் பார்த்ததை விட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால் பின்னர் அவன் உயர்ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மலபார் மக்கள் அனைவரும் பயித்தியக்காரர்கள் என்றும் அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா? இத்தகைய உயர்ஜாதி மலபார் மக்கள் திருந்துவது வரை இந்தியாவைச் சேர்ந்த அனைத்து இன மக்களும் இவர்களை (உயர்ஜாதியினரை) கண்டிக்க வேண்டாமா? இத்தகைய வழக்கங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதற்காக இந்த உயர்ஜாதியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். தங்கள் மதத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பட்டினியால் மடிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சிறுவர்கள் வேறு மதத்திற்குச் சென்றால் உணவு கொடுக்கப்படுகிறது.

சூத்திரன் வேதம் ஓதுவதைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்று, கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில் வைத்து விட்டானென்றால் அவனது நாக்கை வெட்டு என்பன போன்ற கடுமையான வாசகங்கள் உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும் மட்டமான காட்டு மிராண்டித்தனம். சந்தேகமே இல்லை. இத்தகைய காரியங்களைச் செய்த பேய்கள் முன்காலங்களில் இருந்திருக்கின்றனர்.


அதிகாரங்களை கெட்ட விஷயங்களில் பயன்படுத்தினால் மிகுந்த கேடு விளைகிறது. அதிகாரங்களை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய ரிஷிகள் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை, இவற்றுக்கு டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பிராமணன், ஏனைய மக்களுக்கு பகுந்து வழங்காததால்தான் முஸ்லிம் படையெடுப்பு (வட) இந்தியாவில் வெற்றி அடைந்தது. டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பார்ப்பனன் கருவூலத்தைத் திறந்து பொக்கிஷத்தை (நல்ல கருத்துக்கள்) ஆரம்பத்திலிருந்தே அனைத்து மக்களுக்கும் வழங்காததால் இந்தியர்களுக்கு தங்கள் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்படவில்லை. எந்த இனத்தினரும் சிறிது படையுடன் இந்தியாவிற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கெல்லாம் நாம் 1000 வருடங்களாக அடிமைப்பட்டோம். ஏன் என்றால் நம்மிடம் ஒற்றுமை இருக்கவில்லை. வங்காளத்தில் ஒரு பழைய மூடநம்பிக்கை உள்ளது. நல்லபாம்பு ஒருவனைக் கடித்து பின்னர் அந்தப் பாம்பே தனது விஷத்தை கடிப்பட்டவனிடமிருந்து திரும்ப உறிஞ்சி எடுத்துவிட்டால் அவன் பிழைத்துக் கொள்வான் என்பதே இந்த நம்பிக்கை. இதேபோன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள் தான் செலுத்திய விஷத்தை திரும்ப எடுக்க வேண்டும் 

(பக்கங்கள் 150,151,152,155,156)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆந்திர அறிஞர் வேமன்னாவின் கருத்துகள்


இன்றைக்கு ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் தோன்றிய அறிஞர் வேமன்னா பார்ப்பனர் பற்றிப் பாடிய பாடல்கள் பிரமஸ்ரீயோகி வேமனா பத்தியங்கள் என்ற பெயரில் வெளிவந்தவையாகும். அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் செ.முனி கிருஷ்ணன். அந்தப் பார்ப்பன எதிர்ப்புப் பாடல்களுள் சில...

பார்ப்பனர்கள் என்பவர்கள் என்றும் பிறருடைய செல்வத்திற்கே கைநீட்டி பிச்சையேற்று, சத்தியமென்பதே இன்னவாறு என்றறியாமல் திருட்டு நெஞ்சமுற்றவர்களாயும், சோம்பேறிகளாயுந் திரிகின்றனர். மேலும், நாமே பிரமஞானமறிந்த பிராமணர்களென்று தமக்குள் அகங்காரத்துடன் நினைக்கின்றனர். இதனால் பயன் இல்லை அன்றோ? (பாடல் - 15)

பார்ப்பனருக்கு அன்னதானஞ் செய்தால், மிக்க பயன் உண்டென்று சொல்லுகின்றனர். அந்த அன்னத்தை நாய்களுக்குப் போட்டால் அதனால் வரும் குறை என்ன? பாப்பானுள்ளேயும் நாயினுள்ளேயும் ஆத்மா ஒன்றேயன்றோ? (பாடல் - 21)

கோயிலின் உள்ளே இருக்கும் பெண்குறியோடு சேந்த லிங்கத்தை அலம்பி அதில் வரும் நெய் முதலான பல அபிஷேக வஸ்துகளை உண்டு பிரமசிரேட்டன் என்று தங்களைக் கூறிக்கொள்ள பார்ப்பனர்களுக்குச் சற்றும் வெட்கமில்லையா? பிரம்மசிரேட்டன் கல்லுக்குப் பூசை செய்வானா? கல்லைத் தெய்வமென்று தொழுவானா? இவை அஞ்ஞானியின் செயலாம். (பாடல் - 31)

உலகில் குடியானவர்கள், கம்மாளர்கள், கருணீகர், பத்தர் பலரும் தங்களுடைய குலவித்தையை செய்து ஜீவிக்கின்றனர். ஆனால், பிராமணர்கள் என்பவர்கள் யாவரும் மற்றவர்களின் சோம்பலைத் தம் பங்காகப் பெற்றனர் போலும்! (பாடல் - 68)

தந்தை எக்கியத்தையாற்றி தாயுடன் புணர்ந்து இன்பமடைந்தான். அவன் மகனும் அவ்விடம் வந்த அரம்பையுடன் சேர்ந்து அவ்வண்ணம் அனுபவித்தான். தாயையும் புணருகின்ற பொய்யர்களான பார்ப்பனர் செய்யும் மாயவித்தையை மனிதர் அறியார். (பாடல் 88)

கோயில் பகுதி

வெறிகொண்ட நரிகளைப் போல அநேக பார்ப்பனர்கள் கூடி வேதமென்று இசையுடன் பாடிக் கற்சிலைகளில் உயிர் கொடுப்பதாக அறிவற்ற பிரமையால் கூறுகின்றனர். இவை உண்மையான வினையன்று; வயிற்றுப் பிழைப்புக்கேயாம். (பாடல் 137)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்


அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...