செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஆந்திர அறிஞர் வேமன்னாவின் கருத்துகள்


இன்றைக்கு ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் தோன்றிய அறிஞர் வேமன்னா பார்ப்பனர் பற்றிப் பாடிய பாடல்கள் பிரமஸ்ரீயோகி வேமனா பத்தியங்கள் என்ற பெயரில் வெளிவந்தவையாகும். அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் செ.முனி கிருஷ்ணன். அந்தப் பார்ப்பன எதிர்ப்புப் பாடல்களுள் சில...

பார்ப்பனர்கள் என்பவர்கள் என்றும் பிறருடைய செல்வத்திற்கே கைநீட்டி பிச்சையேற்று, சத்தியமென்பதே இன்னவாறு என்றறியாமல் திருட்டு நெஞ்சமுற்றவர்களாயும், சோம்பேறிகளாயுந் திரிகின்றனர். மேலும், நாமே பிரமஞானமறிந்த பிராமணர்களென்று தமக்குள் அகங்காரத்துடன் நினைக்கின்றனர். இதனால் பயன் இல்லை அன்றோ? (பாடல் - 15)

பார்ப்பனருக்கு அன்னதானஞ் செய்தால், மிக்க பயன் உண்டென்று சொல்லுகின்றனர். அந்த அன்னத்தை நாய்களுக்குப் போட்டால் அதனால் வரும் குறை என்ன? பாப்பானுள்ளேயும் நாயினுள்ளேயும் ஆத்மா ஒன்றேயன்றோ? (பாடல் - 21)

கோயிலின் உள்ளே இருக்கும் பெண்குறியோடு சேந்த லிங்கத்தை அலம்பி அதில் வரும் நெய் முதலான பல அபிஷேக வஸ்துகளை உண்டு பிரமசிரேட்டன் என்று தங்களைக் கூறிக்கொள்ள பார்ப்பனர்களுக்குச் சற்றும் வெட்கமில்லையா? பிரம்மசிரேட்டன் கல்லுக்குப் பூசை செய்வானா? கல்லைத் தெய்வமென்று தொழுவானா? இவை அஞ்ஞானியின் செயலாம். (பாடல் - 31)

உலகில் குடியானவர்கள், கம்மாளர்கள், கருணீகர், பத்தர் பலரும் தங்களுடைய குலவித்தையை செய்து ஜீவிக்கின்றனர். ஆனால், பிராமணர்கள் என்பவர்கள் யாவரும் மற்றவர்களின் சோம்பலைத் தம் பங்காகப் பெற்றனர் போலும்! (பாடல் - 68)

தந்தை எக்கியத்தையாற்றி தாயுடன் புணர்ந்து இன்பமடைந்தான். அவன் மகனும் அவ்விடம் வந்த அரம்பையுடன் சேர்ந்து அவ்வண்ணம் அனுபவித்தான். தாயையும் புணருகின்ற பொய்யர்களான பார்ப்பனர் செய்யும் மாயவித்தையை மனிதர் அறியார். (பாடல் 88)

கோயில் பகுதி

வெறிகொண்ட நரிகளைப் போல அநேக பார்ப்பனர்கள் கூடி வேதமென்று இசையுடன் பாடிக் கற்சிலைகளில் உயிர் கொடுப்பதாக அறிவற்ற பிரமையால் கூறுகின்றனர். இவை உண்மையான வினையன்று; வயிற்றுப் பிழைப்புக்கேயாம். (பாடல் 137)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...