பார்ப்பன
ஆதிக்கம் என்றால் உடனே பரங்கி,
உத்தியோகத்திலே, நாம் பங்கு கேட்கிறோம்
என்று குள்ளக் கருத்துடன் கூத்தாடுகின்றனர்.
பார்ப்பன ஆதிக்கம் என்றுரைக்கும் போது உத்தியோக மண்டலத்திலே
அவர்கள் ஆட்சி செலுத்துவதை மட்டுமல்ல,
நாம் குறிப்பது.
ஜாதியிலே
உயர்வு, சமயத்திலே தரகு, சமுதாயத்திலே பாடுபடாத
வாழ்வு, பொருளாதாரத்திலே சுரண்டல் கொள்கை, மதத்துறையிலே மடமையை
வளர்க்கும் கொடுமை, கல்வித் துறையிலே
கற்றோரையும் கசடராக்கும் குரூரம், அரசியலிலே ஆங்கிலேயரை மிரட்டுவதாகக் கூறிக்கொண்டு பேரம் பேசும் போக்கு,
வாழ்க்கைத் துறையிலே இகம், பரம் என்று
பிரித்துப் பேசி, உலகம் மாயை
என்றுரைத்து வாழ்வு அநித்தியம் என்று
வேதாந்தம் போதித்து, மக்களை, எருமை இயல்பு,
கொண்டோராக்கும் கோரம், இன்னோரன்ன பிறவற்றையே
நாம் குறிப்பிடுகிறோம். உத்தியோக மண்டல விசயம் இதிலே
ஓர் ஒதுக்கிடம். முழுவதும் அதுவல்ல. ஊராள்வோரின் உறவினரான மெயிலுக்கு. உத்தியோக விசயமட்டுமே கண்ணை உறுத்துகிறது, பிறவற்றைக்
காணக் கண் இல்லை.
ஆரியம்
ஓர் நயவஞ்சக நாசீசம். பசப்பும்
பாசீசம், ஜாலம் பேசிடும் ஜார்,
சீலம் என்றுரைத்துத் தமிழ்ச்சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக
வல்லரசு, இளித்தவாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச்
சவாரி செய்யும் ஏகாதிபத்தியம். தாசர் கூட்டத்தை உண்டாக்கி,
அதற்குத் தரகுத் தொழில் செய்யும்
தந்திரயந்திரம்.
( அண்ணா
திராவிடநாடு 3.5.42 பக்கம் 12)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக