(திருச்சி
மாவட்டத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்
1983 இல் வெளியிட்டுள்ள “The
Man Making Message of Vivekananda for the use college students” என்கிற புத்தகத்திலிருந்து)
ஒவ்வொரு
மனிதனுக்கும் உரியதைக் கொடு (ழுஎந நஎநசல
அய ளை னரந) என்கின்ற
பழைய ஆங்கிலப் பழமொழியை நாம் நினைவில் கொள்ள
வேண்டும். எனவே, என் நண்பர்களே
வெவ்வேறு ஜாதியர்களுக்கிடையே சண்டையால் பலன் ஒன்றும் இல்லை.
இத்தகைய சண்டைகள் நம்மை மேலும் பலவீனப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு என்று இருந்த தனி
உரிமைகள் மற்றும் சலுகைகள் போய்விட்டன.
என்றென்றைக்குமாக இந்திய மண்ணிலிருந்து போய்விட்டன.
இது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட நல்ல பலன்களில்
ஒன்றாகும். (பார்ப்பனர்களை சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்)
ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று இருந்த
உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்
ஆட்சியானது முழுதும் கெட்டது என்று சொல்ல
முடியாது; எதுவுமே முழுதும் கெட்டதாக
இருப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தியாவில்
ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது
(பார்ப்பனிய கொடுமைகளிலிருந்து). எனவேதான் (வட இந்திய மக்களில்)
அய்ந்தில் ஒரு பங்கு மக்கள்
முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மதமாற்றத்தை முழுதும்
ஏற்படுத்தியது என்பது சரியல்ல. வாளும்,
நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது
என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சநிலையாகும். 20 விழுக்காடிலிருந்து
50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள்
கிறிஸ்தவ மதத்தை தழுவிவிடுவார்கள்.
நீங்கள்
அவர்களது குறைகளைக் களையவில்லையானால், நான் மலபாரில் பார்த்ததை
விட மட்டமான ஒரு விஷயத்தை
உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்
செல்லும் தெரு வழியே ஏழைப்
பறையன் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அதே
ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான
ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பெயரை
தனக்குச் சூட்டிக் கொண்டால் பின்னர் அவன் உயர்ஜாதியினர்
செல்லும் தெரு வழியே செல்ல
அனுமதிக்கப்படுகிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த
உயர்ஜாதி மலபார் மக்கள் அனைவரும்
பயித்தியக்காரர்கள் என்றும் அவர்கள் இல்லங்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி
என்றும் தெரியவில்லையா? இத்தகைய உயர்ஜாதி மலபார்
மக்கள் திருந்துவது வரை இந்தியாவைச் சேர்ந்த
அனைத்து இன மக்களும் இவர்களை
(உயர்ஜாதியினரை) கண்டிக்க வேண்டாமா? இத்தகைய வழக்கங்கள் இன்றும்
நடைமுறையில் உள்ளது என்பதற்காக இந்த
உயர்ஜாதியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். தங்கள் மதத்தைச் சேர்ந்த
சிறுவர்கள் பட்டினியால் மடிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சிறுவர்கள் வேறு மதத்திற்குச் சென்றால்
உணவு கொடுக்கப்படுகிறது.
சூத்திரன்
வேதம் ஓதுவதைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தை
ஊற்று, கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில்
வைத்து விட்டானென்றால் அவனது நாக்கை வெட்டு
என்பன போன்ற கடுமையான வாசகங்கள்
உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும்
மட்டமான காட்டு மிராண்டித்தனம். சந்தேகமே
இல்லை. இத்தகைய காரியங்களைச் செய்த
பேய்கள் முன்காலங்களில் இருந்திருக்கின்றனர்.
அதிகாரங்களை
கெட்ட விஷயங்களில் பயன்படுத்தினால் மிகுந்த கேடு விளைகிறது.
அதிகாரங்களை நல்ல காரியங்களுக்கு மட்டுமே
பயன்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய ரிஷிகள் சேர்த்து
வைத்த பொக்கிஷங்களை, இவற்றுக்கு டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பிராமணன், ஏனைய மக்களுக்கு பகுந்து
வழங்காததால்தான் முஸ்லிம் படையெடுப்பு (வட) இந்தியாவில் வெற்றி
அடைந்தது. டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பார்ப்பனன் கருவூலத்தைத் திறந்து பொக்கிஷத்தை (நல்ல
கருத்துக்கள்) ஆரம்பத்திலிருந்தே அனைத்து மக்களுக்கும் வழங்காததால்
இந்தியர்களுக்கு தங்கள் மதத்தின் மீது
ஈடுபாடு ஏற்படவில்லை. எந்த இனத்தினரும் சிறிது
படையுடன் இந்தியாவிற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கெல்லாம் நாம் 1000 வருடங்களாக அடிமைப்பட்டோம். ஏன் என்றால் நம்மிடம்
ஒற்றுமை இருக்கவில்லை. வங்காளத்தில் ஒரு பழைய மூடநம்பிக்கை
உள்ளது. நல்லபாம்பு ஒருவனைக் கடித்து பின்னர் அந்தப்
பாம்பே தனது விஷத்தை கடிப்பட்டவனிடமிருந்து
திரும்ப உறிஞ்சி எடுத்துவிட்டால் அவன்
பிழைத்துக் கொள்வான் என்பதே இந்த நம்பிக்கை.
இதேபோன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள் தான்
செலுத்திய விஷத்தை திரும்ப எடுக்க
வேண்டும்
(பக்கங்கள் 150,151,152,155,156)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக