செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பார்ப்பனர்கள் கடைசி மூச்சு உள்ளவரை இறங்கி வர மாட்டார்கள்


- அன்னை .வெ.ரா.மணியம்மையார்

நமது அய்யா அவர்கள் இறுதிப் போராட்டம் என்று நமது இன இழிவை ஒழிக்கும் போராட்டத்தை அறிவித்தார்கள்.

அந்தப் போராட்டம் வெற்றி பெறும் தருவாயில் நமது அய்யா அவர்கள் மறைந்து விட்டார்கள்.

அதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும். நம் தோழர்கள் அதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது, தோழர்கள் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொண்டு சிதைந்து விடுவார்கள் என்றெல்லாம் நம் இன எதிரிகள் - பார்ப்பனர்கள் கருதினார்கள்.

அய்யா மறைந்ததற்காகப் பார்ப்பனர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.

அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் உயிரோடிருந்தது உங்களுக்கு எல்லாம் கவசம்போல. அந்தக் கவசம் இன்றையதினம் போய்விட்டது என்பதை நீங்கள் உணரத்தான் போகின்றீர்கள். அந்தக் கவசம் இல்லையே என்று ஏங்க வேண்டிய நிலைமைதான் உங்கள் நிலைமை!

நம் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் கடைசி மூச்சு உள்ளவரை இறங்கிவர மாட்டார்கள். இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற கட்டம் வந்தால்தான் கீழே இறங்குவார்கள். அதை நினைவில் கொண்டு நாம் காரியம் ஆற்ற வேண்டும்.


(விடுதலை 2.2.1974)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...