விடுதலை ஒற்றைப்பத்தி - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை ஒற்றைப்பத்தி - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூலை, 2017

குரு


சோதிடத்தில் இந்தக் குருபகவான் படுத்துகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல. நவக்கிரகங்களுக்குள் குருவும் ஒன்று. அவ்வளவுதான்.

ஆனால், இந்த ஜோதிடர்கள் இருக்கிறார்களே, அவர்களின் உளறலுக்கு ஒரு அளவேயில்லை.

இயற்கையான இந்தக் கிரகங்களுக்கெல்லாம் பிறப்பு வைத்திருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் கூடிப் பிள்ளையைப் பெற்றுக்கொள்வதுபோல கிரகங்களுக்கும், அப்பா, அம்மா கதை எழுதி வைத்துள்ளனர். (அர்த்தமுள்ள இந்து மதத்தில் இந்த விஷயம் இல்லாமல் வேறு எதுவும் கிடையாதே!)

மகாபாரதக் கதையில், குந்தி மந்திரம் சொல்லி சூரியனை வரவழைத்து புணர்ந்து பிள்ளையைப் பெற்றுக்கொண்டாள் என்று எழுதி வைத்துள்ளனர் என்றால், இவர்களின் கிறுக்குத்தனம் சூரிய வெப்பத்தின் டிகிரியை விட அதிகமாக இருக்கும்போலும்!

9 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கும்போதே சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்படும் நிலையில், குந்தி என்னும் பெண் சூரியனைப் புணர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டாள் என்று கூறுவதும், அதனை நம்புவதும், கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு மதியெங்கே போயிற்று என்ற பழமொழியைத்தான் நினைவூட்டும்.

குருவின் கதையும் அப்படித்தான். இதோ இதழ் ஒன்றில் குரு பெயர்ச்சிபற்றி வெளியிட்டுள்ள அளப்பு:

தேவர்களின் குருவாக பிரஹஸ்பதியாகிய குரு பகவான் திகழ்ந்ததுபோல அசுரர்களுக்கு சுக்கிரன் குருவாக திகழ்ந்தார். இறந்த வர்களை உயிர்த்தெழ வைக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை சுக்கிரன் அறிந்து இருந்ததால், தேவாசுரப் போரில் மாண்ட அசுரர்களை அந்த மந்திரத் தைப் பயன்படுத்தி சுக்கிரன் உயிர்த்தெழச் செய்தார். இதனால் அசுர பலம் கூடிக் கொண்டே போனது. இதனால் திகைத்துபோன பிரஹஸ்பதி அந்த மந்திரத்தை சுக்கிரனிட மிருந்து கற்று வருவதற்காக தன் மகன் கசனை அனுப்பி வைத்தார்.

கசன் தான் குரு பக வானின் மகன் என்று சிறிதும் காட்டிக்கொள்ளாமல் சுக் கிரன் ஆசிரமத்தில் இருந்து வந்தான். எனினும் அசுரர் களில் சீடர்களில் கசனை அடையாளம் கண்டு அவ னைக் கொன்றனர். எனி னும், சுக்கிரன், கசனை தன்மந்தி ரத்தைப் பயன்படுத்தி காப் பாற்றினார்.

சுக்கிரன் இவ்வாறு காப் பாற்றவே, மூன்றாவது முறை கசனின் பிணத்தை எரித்து அந்த சாம்பலை பானத்தில் கலந்து சுக்கிராச் சாரியாருக்கு கொடுத்துவிட்டனர். அவரும் அதை மறந்து குடித்துவிட்டார்.

சுக்கிரன் மகள் தேவ யானி கசனை காதலித்து வந்தாள். எனவே, கசனை காணாமல் தவித்த அவள் தன் தந்தையிடம் முறையிட்டாள். கசனை வழக்கம்போல தன் சீடர்கள் கொன்றிருப் பார்கள் என்று நினைத்த சுக்கிராச்சாரியார் அவனை உயிர் பெற வைப்பதற்காக மிருத சஞ்சீவினி மந்திரத் தைப் பிரயோகித்தார்.

அவரது வயிற்றுக்குள் இருந்த கசன் உயிர்பெற் றான். கசனை வெளியே கொண்டுவர வேண்டுமா னால், சுக்கிரன் மாள வேண் டியிருக்கும். எனவே, அந்த மந்திரத்தை கசனிடம் உப தேசித்தார். கசன் சுக்கிரனின் வயிற்றை பிளந்துகொண்டு வெளியே வந்தார். கீழே இறந்து கிடந்த சுக்கிரனை மிருத சஞ்சீவினி மந்திரத் தைப் பயன்படுத்தி உயிர்த் தெழச் செய்தான். பிறகு தன் தந்தையிடம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கூறினார்.

ஏதாவது புரிகிறதா? ஒன்று மட்டும் தெளிவு குரு தேவர்களின் தலைவன், சுக்கிரன் அசுரர்களின் தலைவன். தேவாசுரப் போராட்டம் (ஆரி யர்  திராவிடர் போராட்டம்) கிரகங்களுக்குள்ளும் நடை பெற்றுள்ளதாம்.

ஆரியராவது, திராவிட ரா வது என்போர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

4.1.  2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

திராவிட வெறுப்பு


தமிழ் செம்மொழிபற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் அரிய தகவல்களைக் கொண்ட தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்ஆறாவது கட்டுரையில் ஒரு முக்கிய வரலாற்றுக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்து வந்த பா...வில்முரளி மனோகர்ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர்திராவிட மொழிக் குடும்பத்தின்மீது இருந்த தீராத வெறுப்பின் காரணமாகதமிழ் செம்மொழியென அறிவிக்கப் பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர் மறையான அணுகுமுறையும்காட்டிய தாமதமும் தமிழ் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப் போடச் செய்தன என்ற நிகழ்வினை வர லாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை மறுத்திட இயலாது (முரசொலி, 30.12.2009) என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழை நீச்ச பாஷை என்று சொல்லும்கருதும் கூட்டத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள்அதன் காரணமாகவே இந்த வெறுப்பும்எதிர்ப்பும்!

திராவிட மொழிக் குடும்பத்தின் மீது இவர்களுக்கு இருந்த தீராத வெறுப்பு என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது ஏதோ ஒரு கோப உணர்வாலோகுற்றம் சாற்றவேண்டும் என்ற எண்ணத்தாலோமேம்போக்காகவோ கூறப்பட்டதல்ல.

இது ஒரு துல்லியமான வரலாற்று ரீதியான கருத்து என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கூறினாலே போதுமானது.

உலகளாவிய திராவிட மொழியியற் பள்ளி (ஐவேநசயேவடியேட ளுஉடிடிட டிக னுசயஎனையை டுபேரளைவஉளதிருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறதுஇதன் தோற்றுநர் திராவிட மொழிப் பேரறிஞரும்தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தருமான டாக்டர் வி.அய்சுப்பிரமணியம் ஆவார்மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும்பார்ப்பனருமான முரளிமனோகர் ஜோஷியைச் (பா...) சந்தித்துதிராவிடியன் என்சைக்ளோபீடியா என்ற நூலை அன்பளிப்பாகத் தந்தார்.

நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷிஇந்நூலின் பெயரில் உள்ள திரவிடியன் என்ற சொல்லை நீக்கிவிடலாமன்றோ என்றார்.

இதற்குப் பேராசிரியர் டாக்டர் வி.அய்சுப்பிரமணியம் அவர்கள் அளித்த பதில்தான் மிகமிக மிக முக்கியமானதும்அவரின் அறிவு நாணயத்துக்கும்அஞ்சாமைக்கும் கட்டியம் கூறுவதும் ஆகும்.

ஜனகனமன நாட்டுப் பண்ணிலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றாரே பார்க்கலாம். (னுடுஹ சூநறளபிப்ரவரி 2003).

மானமிகு கலைஞர் அவர்கள் பா...வினர்மீது வைத்த குற்றச்சாற்று மிகமிக மிகச் சரியானது என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

31.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...