- கைவல்யம்
சூத்திரன்
என்றால் பலபடி தாழ்த்தியே ஸ்மிருதி,
இதிகாசப் புராணங்களிலெல்லாம் எழுதப்பட் டிருப்பதை, சைவர்கள் கூட்டம் உணராவிட்டாலும், பண்டிதன்
அறிவான். அந்தக் காரணத்தைக் கொண்டல்லவா
அப்பர் சுவாமிகளை சூத்திரன் என்று அவருக்கு வேத
பாராயணம் சொல்ல இன்னும் பார்ப்பான்
மறுக்கிறான். தமிழ் மறை என்று
சைவர்களால் போற்றப்படும் தேவாரத்தை சிவபெருமானுக்கு முன்னாலும், நடுவிலும் ஓதமறுப்பதற்கு சூத்திர பாஷை என்பதுதானே
காரணம். அப்பர் சுவாமிகளுக்கு சாதம்
வைத்துப் படைப்பதில் பல புரட்டுகள். பார்ப்பனர்களுக்குப்
பரிந்து பேசும் பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தாலும்,
அவ்வுணர்ச்சியை அவர்கள் வயிற்றுப் பிழைப்பு
மறைத்துவிடுகிறது. இன்னும் ஆழ்ந்து கவனித்தால்
அப்பர் சுவாமிகளின் விக்கிரகத்தை மற்ற பார்ப்பன விக்கிரகத்திற்கு
சற்று அப்பால் தள்ளி வைத்திருப்பது
தெரியும். இதற்கு சூத்திரன் என்பதுதானே
காரணம்.
- குடிஅரசு
16.6.29
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக