விடுதலை ஒற்றைப்பத்தி - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை ஒற்றைப்பத்தி - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூலை, 2017

பம்பா நதி


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பம்பா நதியில் முழுக்குப் போடுவார்கள். பொதுவாகவே கோயிலையொட்டி இருக்கும் குளம் அல்லது நதிகளில் போடும் முழுக்குக்குப் பெயர் புண்ணிய முழுக்காம்.

கும்பகோணம் மகாமகத்தில் குளிப்பது என்பதுதான் பிரதானம்! 12 வருடம் செய்யும் பாபங்கள் ஒரே முழுக்கில் (றுடிடந ளுயடந) காலி!

இப்படி பாவங்களைத் தைரியமாகச் செய்யத் தூண் டும் ஏற்பாட்டுக்கு - லைசென்சுக்குப் பெயர்தான் கோயில் வழிபாடு - புண்ணிய முழுக்கு - இத்தியாதி... இத்தியாதி!

நாட்டில் குற்றங்கள் பெருகினால்தான் மதச் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் அனைத்திற்கும் கொள்ளை லாபமும் - கொண்டாட்டமும்!

கடவுள்களே குற்றங்கள் செய்தார்கள் - கொலை செய்தார்கள் - கொள்ளை அடித்தார்கள் - கற்பழித் தார்கள் என்று எழுதி வைத்திருப்பதும் - அவற்றிற்காக விழாக்கள் கொண்டாடுவதும் எல்லாம் மக்கள் மத்தியில் ஒழுக்கம் பரவவேண் டும் என்பதற்காக அல்ல - மாறாகக் குற்றங்கள் பெருக வேண்டும்; அதன்மூலம் பிராயச்சித்தம் - கழுவாய், நேர்த்திக் கடன் என்று கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கலாம் - பொருளைச் சுரண்டலாம் என்பதுதான் இந்த முடிச்சுக்குள் பதுங்கியிருக்கும் இரகசிய சதி!

இந்த வகையில் ஒவ்வொரு கோயிலுக்கும் - நதிகள் மற்றும் ஆறுகளுக்கும் தலப் புராணங்கள் எழுதிவைத்துள்ள சூழ்ச்சியும் இதுதான்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்றதற்கே காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறினார் தெரியுமா? தோஷங்களுக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம்தான் என்றார். இதன் பொருள் காந்தியாரை இந்து மதவெறியன் - பார்ப்பான் சுட்டுக் கொன்றதுகூட ஒரு குளியலில் (ஸ்நானத் தில்) தீர்ந்து போய்விடுமாம்.

அறிவியல் ரீதியில் உண்மை என்னவென்றால், இந்தப் புண்ணிய நதிகள் என்று விளம்பரப்படுத்தப்படு பவை எல்லாம் நோய்களின் ஒட்டுமொத்தமான உறைவிடமாகும். கிருமிகள் மொத்தகுத்தகை எடுத்துக் கொண்டு குலாவும் இடமாகும்.

அய்யப்பப் பக்தர்கள் பம்பா நதியில் குளித்துக் குதித்தாடும் காட்சிகளை ஏடுகள் படம் எடுத்துப் போட்டுள்ளன.

இதனைப் பார்க்கும் பொழுது, படிக்கும்பொழுது நமது மனிதநேய நெஞ்சம் பதைபதைக்கிறது. பக்தி புத்தியைக் கெடுத்து உடல் நலனையும் கெடுத்துத் தொலைக்கிறதே என்கிற பரிதாபம்தான் பகுத்தறிவாளர்களுக்கு.

பம்பா நதிபற்றி இதற்கு முன் வந்த தகவல்களைக் கொஞ்சம் அறிவுத் தராசில் எடை போட்டுப் பார்க்கட்டும்!

நூறு லிட்டர் பம்பா நதியில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கண்டு பிடித்துச் சொல்லியுள்ளனர். 1999-2000 ஆம் ஆண்டில் இந்த அளவு 2 லட்சத்து 55,000 கிருமிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பெரும்பாலும் பம்பாநதி மனிதக் கழிவுகளால் பாழ்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த வகை பாக்டீரியாக்கள் 500 என்ற அளவில் இருந்தாலே ஆபத்து - இரண்டரை லட்சம் என்கிற போது தலையே சுற்றுகிறது!

மனிதநேயப் பகுத்தறிவு வாதிகள் பரிதாபப்படுகிறார்கள் - பதறுகிறார்கள். மத வாதிகளோ சபாஷ் போட்டு, சுரண்டலுக்குக் கோணிப்பைகளைத் தயாராக வைத்துள்ளனர்!

17.12. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆருத்ரா!


சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்பற்றிச் சிறப்பிதழ்கள்; ஆன்மிகத்தைப் பரப்பி மக்களை மொட்டை அடிப்பதற்கென்றே தான் பல ஏடுகள் இருக்கின்றனவே!

அது என்ன ஆருத்ரா? மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் சிதம்பரத்தில் நடைபெறும் விழாவாம் இது. ஆருத்ரா அல்லது திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியதாம். இந்நாளில் இரவு ஆரம்பித்து மறுநாள் காலைவரை அபிஷேகம் நடக்குமாம். (மூச்சுத் திணறப் போகிறது - ஜாக்கிரதை!)

மக்கள் மத்தியிலிருந்து பக்தி ஒரு சிறு நொடியும் அகலாமல், உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தெருப் புழுதியையாவது செய்து கொண்டே இருக்கவேண்டுமே!
மனிதன் தனக்குக் கற்பித்துக் கொண்டதையெல்லாம் கடவுளுக்கும் கற்பித்து விட்டான்; காரணம் அந்தக் கடவுளைக் கற்பித்ததே மனிதன் தானே!

பஞ்சப் பூதங்களுடன் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) சேர்த்து லிங்க வடிவத்தில் சிவனை வழிபடுகிறார்களாம். அதில் சிதம்பரம் நடராஜன் என்பவர் ஆகாய வடிவத்தில் இருக்கும் கடவுளாம்.
108 வகை நடனங்களில் கரை கண்டவராம். காளிக்கும் இவருக்கும் நடனப் போட்டி ஏற்பட்டதாம். காளி சற்றும் சளைக்காமல் ஆடினாளாம்.

ஆண்களுக்கே உரிய குயுக்திப் புத்தியால் இடது காலை தலைக்குமேல் தூக்கி ஆடிக் காட்டினாராம் நடராஜன்.

பெண்ணாகிய காளி காலைத் தலைக்குமேல் தூக்கி ஆபாசமாக ஆடமாட்டாள் அல்லவா! இந்தக் கீழ்த்தரமான ஆபாச நடவடிக்கையால் நடராசன் நடனத்தில் வெற்றி பெற்றுவிட்டாராம். இப்படி அவர் ஆடியதற்குப் பெயர் ஊர்த்துவ தாண்டவமாம்!

இதுபோன்ற கேவலங்களுக்குத் தத்துவார்த்தம் கற்பித்து விடுவார்கள். அப்பொழுதுதான் மக்கள் சிந்திக்க மாட்டார்கள். இதிலும் அப்படித்தான்; நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு அருள்பாலிப்பது போலவே, வானுலகத்தவர்க்கும், அருள் செய்வதற்கென்றே ஊர்த்துவத் தாண்டவம் ஏற்பட்டதாம்.

இந்த நடராஜன் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்த போது அவரது உடுக்கிலிருந்து முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக்கினான். (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி - கல்கி, 25.6.1972) தெய்வ மொழி என்பது இதுதானோ - என்னே சாமர்த்தியமான புளுகு!

மொழி எப்படி தோன்றுகிறது என்ற அறிவியல் சிந்தனைக்கு இது எதிரானது அல்லவா!

எல்லாம் பார்ப்பனர்களின் கைசரக்கே - ஆருத்ரா தரிசனம் என்கிறபோது அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நினைவிற்கு வருகிறது - இதோ ஒரு காட்சி!

வெள்ளையன்: சாமி தானுங்க எசமான் இருக்கு.

மாயேந்திரன்: இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா, கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்கச் செய்கிறார்) நிற்கிறான் வெள்ளை. பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார் மாயேந்திரன் (வெள்ளை காலை ஊன் றுகிறான்). காலைத் தூக்கச் சொல்லுகிறார் மாயேந்திரன். (மறுபடியும் காலைத் தூக்கி சிறிது நேரம் நின்றுவிட்டு காலை ஊன்றுகிறான்) ஏய்! ஏண்டா ஊன்றுன? தூக்குடா காலை என்கிறார் மாயேந்திரன்!

வெள்ளை: கால்வலிக்கு துங்க எசமான்

மாயேந்திரன்: ஏண்டா, ரெண்டு நிமிஷம் நிக்கறதுக்கே கால் வலிக்குதுன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாமே இருக்குதடா?

வெள்ளை: எங்கே எசமான்?
மாயேந்திரன்: சிதம்பரத் திலே!
வெள்ளை: அது கல்லு எசமான்!
பக்தன் வாயாலேயே அண்ணா இப்படி சொல்லவைத்தாரே - அதுதான் அண்ணா!

ஆருத்ரா தரிசனத்துக் காகக் காத்துக் கிடக்கும் பக்தர்கள் சிந்திப்பார்களாக!

16.12. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...