திங்கள், 17 ஜூலை, 2017

இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு


இந்து பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து  ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே! இந்தக் காலத்தில் கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள் : 10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் வீட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருக்கக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் இந்துவே! 10-வயதிலும் 12-வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12-வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது ஏன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.03.1928 பக்கம் 7)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

தாழ்த்தப்பட்டவர்களை விட்டு விலக விரும்பாத பார்ப்பனப் பெண்கள்


சர்வபள்ளி சரித்திரம் (டாக்டர் ராதாகிருஷ்ணன் பரம்பரை)

ஜவகர்லால் நேரு அவர்களிடம் பல ஆண்டுகாலம் தலித் செயலாளராக  பணியாற்றிய எம்..மத்தாய் நேரு கால நினைவலைகள் என்ற ஒரு நூலை எழுதினார். அது பரபரப்பாக விற்பனை ஆனது!

இப்போது ஜவஹர்லால் நேரு - சுயசரிதை என்ற பெயரில் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் கோபாலன் ஒரு நூலை எழுதியிருக்கிறார்! இந்த நூலிலே எம்..மத்தாய் அவர்களை பல பல இடங்களில் கடுமையாக தாக்கியிருக்கிறார். ஓர் இடத்தில் எம்..மத்தாயை அறிவில்லாதவர் அடித்த புயலில் கோபுரத்தில் ஏறியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு எம்..மத்தாய் ஆன் லுக்கர் ஏட்டில் பதிலடி தந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதை  அப்படியே தமிழில் தருகிறோம்! படியுங்கள்!

எந்த வைதீக கும்பகோணம் அய்யங்காரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். சர்வபள்ளி கிராமத்தில் உள்ள அய்யர்கள் எவரும் பார்ப்பனர்கள் அல்ல என்பது மட்டுமல்ல! அடித்த புயலில் மேலே ஏறியவர்கள் என்ற உண்மையைச் சொல்வார்கள். இந்த கோபாலும் (அதாவது டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன்) சர்வபள்ளி ஆரியராவார். அதற்கு ஒரு தகவல் இருக்கிறது. ஆந்திர மாநிலம் சர்வபள்ளி கிராமத்தைச் சார்ந்த சில தாழ்த்தப்பட்டவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.

அப்போது மைலாப்பூர் குளத்திலே குளித்துக் கொண்டிருந்த சில பார்ப்பனப் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த நாளில் அவர்களை விடுவித்து விட்டார்கள். ஆனால் அந்தப் பார்ப்பனப் பெண்கள்  அவர்களை விட்டுவர விரும்பவில்லை. இதற்குக் காரணம் இரண்டு. 1. தங்கள் பார்ப்பன குடும்பத்தில் இதனால் இழைக்கப்படும் அவமானங்களைத் தாங்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 2. ஆபீஸ் கிளார்க்குகளாக இருக்கும் தங்கள் பார்ப்பனக் கணவர்களைவிட இந்தத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உடல் பசியை நன்றாகவே தீர்த்து வைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இந்தப் பார்ப்பனப் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு சேர்ந்து தங்கள் வாரிசுகளை உருவாக்கினார்கள். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கிராமமாக இருந்த சர்வபள்ளி  பிறகு இந்தக் காரணங்களால் ஒரு பார்ப்பன கிராமமாகவே மாறிவிட்டது. வைதீக கும்பகோணம் அய்யங்கார்களுக்கு இருக்கும் நில பிரபுத்துவ மனப்பான்மை இந்த சர்வபள்ளி கோபாலுக்கு இருப்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவருடைய தரத்துக்கு என்னை ஏன் கீழே இறக்க வேண்டும்என்று கேட்டிருக்கிறார் எம்..மத்தாய்!


எம்..மத்தாய் அவர்களால் எழுதப்பட்டு  ஆன் லுக்கர் மார்ச் 16- 31 (1980) இதழில் வெளிவந்த கட்டுரை

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

நம்பூதிரிப் பார்ப்பனருக்குள் சீர்திருத்தம்


மலையாளத்தை சேர்த்த கவளப்பரை ஜமீனுக்குட்பட்ட ஒரு நம்பூதிரி வாலிபர் தங்கள் ஜாதி அனுஷ்டானங்களுக்கு விரோதமாய் அதாவதுஒரு நம்பூதிரி தன் தமயன் இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. மற்றபடி நாயர் பெண்களைத்தான் வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எதிரிடையாய் தங்கள் வகுப்பில் ஒரு நம்பூதிரி பெண்ணை மணம் செய்து கொண்டார். இது விசயத்தில் மற்ற நாயர்கள் ஒன்று சேர்ந்து கண்டித்தும், அந்த வாலிபர் நம்பூதிரியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிறகு, அந்த ஜமீன்தார் திரு.களப்பரை முப்பல் நாயரிடம் சென்று முறையிட்டார்கள். அந்த நாயர் கனவான் நம்பூதிரியைப் பகிஷ்காரம் செய்ய தனது குடியரசுகளுக்கு உத்தரவுவிட்டு விட்டார். இந்த கஷ்டம் சகிக்க வொட்டாமல் நம்பூதிரி வாலிபர் தனது மனைவியை தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஆனபோதிலும், நம்பூதிரி வாலிப சங்கத்தார் ஓர் சுற்றறிக்கை விளம்பரம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதன் சாரமாவது.

நம்பூதிரிகள் விஷயத்தில் திரு.களப்பரை நாயர் பிரவேசித்திருப்பதைப் பார்க்கும்போது நாயர் பெண்களுக்கு சந்ததியை உண்டாக்கும் நம்பூதிரி காளைகள் இல்லாமல் போய்விடுமே என்ற எண்ணத்தால் பிரசேவித்திருப்பதாக தெரிகிறது. ஆதலால் இனிமேல் இந்த சுயமரியாதையற்ற நாயர் பெண்களிடம் கலவி செய்ய ஆசைப்படாதீர்கள். இதனால் நம் ஜாதிக் பெண்களின் கண்ணீர் ஆறாய் பெருகுகிறது. இனிமேல் நம்பூதிரிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சுற்றறிக்கை விடுத்திருக்கிறார்கள்.

- குடிஅரசு 26.10.30 பக்கம். 13.

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

பிற்கால சோழர் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம்


சாதியை நிலை நாட்டுவதே  மன்னர்கள் கடமை

முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தின்பொழுது, சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால், சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்குக் குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்றுதமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களின் கருவறைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான். சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின. ஆனால் அக்கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந்திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும், செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு. எனவே உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவையாவும், எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மேன்மேலும் வளர்த்து வரவும்தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர். வேந்தர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வம்சங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே தம் சீரிய கடமையாம் எனக்கூறும் மெய்க்கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும், புராணங்களும் எழுந்தன.

வரலாற்றுப் பேராசிரியர் . இராமசாமி, எம்.., சி.எப்.,
அவர்களால் எழுதப்பட்ட தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும், பக்கம் 34, 35)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பனீயத்தின் ஆக்கிரமிப்பு!


அரசியல் சட்ட நிர்ணயம்
162 பேரில் 80 பேருக்கு மேல் பார்ப்பன சமூகம்

அரசியல் சட்ட நிர்ணயச் சபை ஏற்படுத்தப்பட்டபோது  அதை பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டார்கள்!

1.            .வி. அளகேசன் - பார்ப்பனரல்லாதார்.
2.            எம்.. அய்யங்கார் - பார்ப்பனர்.
3.            .கே. அய்யர் - பார்ப்பனர்
4.            என்.ஜி. அய்யங்கார் - பார்ப்பனர்.
5.            அந்தோணி பிராங்க் - ஆங்கிலேய இந்தியர்.     6.        ஷேக்முகபூப் அலி - முஸ்லீம் 7.                டி..ஆர். செட்டியார் - பார்ப்பனரல்லாதார்.
8.            திருமதி துர்க்காபாய் - பார்ப்பனத்தி.
9.            ராம்நாத் கோயாங்கோ - மார்வாரி (இந்து)
10.          முகம்மது இப்ராஹிம் - முஸ்லீம்
11.          முகம்மது இஸ்மாயில் - முஸ்லீம்
12.          டி.டி. கிருஷ்ணமாச்சாரி - பார்ப்பனர்.
13.          மாதவமேனன் - பார்ப்பனரல்லாதார்.
14.          காமராசர் - பார்ப்பனரல்லாதார்.
15.          நாகப்பா - தாழ்த்தப்பட்டவர்.
16.          அய்.வி. முனிசாமி - தாழ்த்தப்பட்டவர்.
17.          போக்கர் - முஸ்லீம்.
18.          ராசகோபாலாச்சாரியார் - பார்ப்பனர்.
20.          என்.ஜி. ரங்கன் - பார்ப்பனரல்லாதார்.
21.          ராவ். பி. சிவா - பார்ப்பனர்.
22.          கலா வெங்கடர் - பார்ப்பனர்.
23.          வி.சி. கேசவா - தாழ்த்தப்பட்டவர்.
24.          கோபால் ரெட்டி - பார்ப்பனரல்லாதார்.
25.          சஞ்சீவரெட்டி - பார்ப்பனரல்லாதார்.
26.          கே. சந்தானம் - பார்ப்பனர்.
27.          சீத்தாராம பட்டாபி - பார்ப்பனர்.
28.          சீத்தாராம ரெட்டி - பார்ப்பனரல்லாதார்.      29. சுப்பராயன் - பார்ப்பனரல்லாதார்.

மேலே குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் அடங்கியிருப்போர் சென்னை மாகாணப் பிரிவின் சார்பில் பங்கேற்றியிருந்தவர்கள் மட்டுமேயாகும். இந்தப் பட்டியலைப் பார்த்தால் இன்னும் விரிவான விளக்கம் கிடைக்கும்.
அதில் மொத்தம் 162 பேர் அடங்கியிருந்தனர். அவற்றில் 80 பேருக்கு மேல் பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்தவர்களேயாவர். சென்னை மாகாணப் பிரிவில் 29 பேருக்கு 12 பேர் பார்ப்பனர்! என்னே விந்தை! மக்கள் தொகை விகிதத்தில் 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் 42 விழுக்காடு இடத்தை அச்சபையில் ஆக்கிரமித்ததின் விளைவு இன்று இந்திய அரசியல் சட்டம் அவர்களது போர்வாளாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. பார்ப்பனர்கள் ஆதிக்கம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இல்லவே இல்லையென்று முழங்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் பதில் என்ன?

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...