சாதியை நிலை நாட்டுவதே மன்னர்கள் கடமை
முதலாம் இராசராசன்,
முதலாம் இராசேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தின்பொழுது,
சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால்,
சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்குக் குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று.
தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களின் கருவறைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான். சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின.
ஆனால் அக்கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந்திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும்,
செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு. எனவே உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும்,
ஊர்களும்,
அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவையாவும், எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும்,
மேன்மேலும் வளர்த்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர். வேந்தர்களுக்கும்,
அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வம்சங்களையும்,
கோத்திரங்களையும்,
சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள்.
மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே தம் சீரிய கடமையாம் எனக்கூறும் மெய்க்கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும்,
புராணங்களும் எழுந்தன.
வரலாற்றுப் பேராசிரியர் அ. இராமசாமி, எம்.ஏ., சி.எப்.,
அவர்களால் எழுதப்பட்ட தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்,
பக்கம்
34, 35)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக