திங்கள், 17 ஜூலை, 2017

நம்பூதிரிப் பார்ப்பனருக்குள் சீர்திருத்தம்


மலையாளத்தை சேர்த்த கவளப்பரை ஜமீனுக்குட்பட்ட ஒரு நம்பூதிரி வாலிபர் தங்கள் ஜாதி அனுஷ்டானங்களுக்கு விரோதமாய் அதாவதுஒரு நம்பூதிரி தன் தமயன் இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. மற்றபடி நாயர் பெண்களைத்தான் வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எதிரிடையாய் தங்கள் வகுப்பில் ஒரு நம்பூதிரி பெண்ணை மணம் செய்து கொண்டார். இது விசயத்தில் மற்ற நாயர்கள் ஒன்று சேர்ந்து கண்டித்தும், அந்த வாலிபர் நம்பூதிரியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிறகு, அந்த ஜமீன்தார் திரு.களப்பரை முப்பல் நாயரிடம் சென்று முறையிட்டார்கள். அந்த நாயர் கனவான் நம்பூதிரியைப் பகிஷ்காரம் செய்ய தனது குடியரசுகளுக்கு உத்தரவுவிட்டு விட்டார். இந்த கஷ்டம் சகிக்க வொட்டாமல் நம்பூதிரி வாலிபர் தனது மனைவியை தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஆனபோதிலும், நம்பூதிரி வாலிப சங்கத்தார் ஓர் சுற்றறிக்கை விளம்பரம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதன் சாரமாவது.

நம்பூதிரிகள் விஷயத்தில் திரு.களப்பரை நாயர் பிரவேசித்திருப்பதைப் பார்க்கும்போது நாயர் பெண்களுக்கு சந்ததியை உண்டாக்கும் நம்பூதிரி காளைகள் இல்லாமல் போய்விடுமே என்ற எண்ணத்தால் பிரசேவித்திருப்பதாக தெரிகிறது. ஆதலால் இனிமேல் இந்த சுயமரியாதையற்ற நாயர் பெண்களிடம் கலவி செய்ய ஆசைப்படாதீர்கள். இதனால் நம் ஜாதிக் பெண்களின் கண்ணீர் ஆறாய் பெருகுகிறது. இனிமேல் நம்பூதிரிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சுற்றறிக்கை விடுத்திருக்கிறார்கள்.

- குடிஅரசு 26.10.30 பக்கம். 13.

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...