சிரார்த்தம் என்பதன் பேரால் நம் மூதாதையர்களை மோட்ச லோகத்திற்கு அனுப்புவதாகச் சொல்லி, தங்களுக்குப் போதிய காய்கறி, அரிசி, சாமான்களை பெற்றுக் கொள்ளுவதுடன், செருப்பு, வேஷ்டி உட்படக் குடும்பத்துக்கு வேண்டிய பல சாமான்களையும் அபகரித்துக் கொள்ளுகின்றனர். நாம் கொடுக்கும் சாமான்களை நம் பிதுர்க்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நாமும் ஏமாந்து களிப்புற்று இருக்கிறோம். அந்தோ! நம் மடமைதான் என்னே!
தற்காலத்தில் இங்கிலாந்தில் உள்ள ஒருவருக்கு ஒரு ரூபாய் மணியார்டரில் அனுப்பினால் அதைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு ரசீது நமக்குத் திருப்பி வருகிறது. ஆனால்,
வருடந்தோறும் நம் பிதுர்க்களுக்கு அனுப்பும் சாமான்களுக்கு ஏதாவது பதில் ரசீது வருகின்றதா என்பதை நம்மில் ஒருவராவது கவனிக்கிறோமா?
(திராவிடன், 1929)
இப்படி ஒரு வித்தியாசமான முறையில் தனித்தன்மையோடு பேசியவர்தான் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமிதிருவரங்கத்திலே ஆத்திகர்கள் மாநாடு கூட்டினர். திராவிடர் கழகத்தினரை கையில் கம்பு, கத்திகளை வைத்து எதிர்க்க வேண்டும். தர்ப்பை ஏந்துகிற கையில் தடிக் கம்புகளை ஏந்துங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் அன்றைக்கு அழகிரி பேசினார்.
விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆவது? தர்ப்பை ஏந்துகிறவன் தடி ஏந்தினால் தடி ஏந்தியவன் என்ன ஆவது? என்று பேசினார். அதனால்தான் அவர் அஞ்சாநெஞ்சன் என்கிற அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆனார். அவரது நினைவு நாள் இன்று (1949) (28.3.1945).
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக