புதன், 2 ஆகஸ்ட், 2017

ஏ.வி.பி.ஆசைத்தம்பி


ம்பீரமான தோற்றம் - அழுத்தமான சொல்லாற்றல் - வசீகரமான எழுத்தாற்றல் - எந்த நிலையிலும் எள் மூக்கு முனையளவும் வழுவாத தன்மான இயக்கக் கொள்கைப் பிடிப்பு - இவற்றின் ஒட்டுமொத்த வடிவம்தான் வாலிபப் பெரியார் என்ற அடைமொழியுடன் போற்றப்படும் .வி.பி. ஆசைத்தம்பி சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படத் துறை எழுத்தாளர், சமுதாயம், அரசியல் துறைகளில் பல நூல்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்கு உரியவர் ஆறுமாத கடுங்காவல் தண்டனை; அய்ந்தாயிரம் ரூபாய் அபராதம்! சிறையிலே மொட்டையடிப்பு!

தி.மு.. சார்பில் ஒற்றை மனிதராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பீரமான முறையில் செயல்பட்டவர். மக்களவையில் அவர் ஆற்றிய கடைசி உரை கூட அவர் எத்தகைய பெரியார் இயக்கவாதி என்பதற்கான முத்திரையாகும். இதோ .வி.பி. ஆசைத்தம்பி பேசுகிறார்:

மத்திய அரசின் உள்துறை இலாகா இந்தியாவில் பல மதங்கள் இருந்தும் இந்து ராஜ்யம் உருவாக்க முயல்வதாக கோவிந்தன் நாயர் குற்றம் சாட்டினார். ஆனால், மத்திய அரசின் உள்துறை இலாகா வெறும் இந்து ராஜ்யத்தை மட்டுமல்ல - இந்தி மொழி பேசும் இந்துக்களின் ராஜ்ஜியத்தை உருவாக்க முயலுகிறது என்று தி.மு.. சார்பில் குற்றஞ்சாட்டுகிறேன் என்று பேசினார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அன்றைய அளவான இந்து சார்புக்கே அவ்வளவு ஆவேசப்பட்ட .வி.பி இப்பொழுது இருந்திருந்தால் பச்சையாக இந்துத்துவாப் பேசும் பிஜேபியை என்ன பாடுபடுத்தி இருப்பார்? அவர்களாவது இந்தியைத் திணித்தார்கள். இவர்களோ பார்ப்பனர் மொழியான சமஸ்கிருதத்தையல்லவா ஊட்டி வளர்க்கின்றனர் - இன்னும் எந்த அளவு எரிமலைக் குழம்பைக் கக்கி இருப்பார்?


விடுதலை, 07.04.2001

நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...