சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக - பாண்டி மண்டலத்தில் பட்டத்து யானையாகப் பவனி வந்த ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1953).
செங்கற்பட்டில் 1929-இல் நடைபெற்ற மாகாண முதல் மாநாட்டின் தலைவர் மட்டுமல்ல;
இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.
அவரை இயக்கத்திற்குத் தலைவராக வைத்து தன்னைத் துணைத் தலைவராக ஒப்பம் செய்தவர் தந்தை பெரியார்! தந்தை பெரியாரின் பெருந்தன்மையும்,
சவுந்தரபாண்டியனாருக்கு உள்ள பெருமையும் தெளிவாக விளங்கும்.
சென்னை - தியாகராயர் நகரில் உள்ள பாண்டி பஜார் என்பது ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட பஜார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
அந்தப் பாண்டியன் பஜார் பாண்டி பஜாராகி - அதன் நோக்கத்தையே கொலை செய்துவிட்டார்களே
- வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயர் பெயரால் விளங்கும் நகரை டி.நகராக ஆக்கியதுபோலவே!
சவுந்தரபாண்டியனார் சிறந்த சமூக நலவாதி - நாடாளுமன்றவாதி என்கிற ஒரு பக்கம் மட்டுமே நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆனால்,
அவர் தலைசிறந்த விவசாயி வேளாண் துறையில் பல சாதனைகளைப் படைத்து - பல கேடயங்களையும்,
விருதுகளையும் பெற்றவர் என்பதும் பலருக்கும் தெரியாத சேதிதான்.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
22.02.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக