புதன், 2 ஆகஸ்ட், 2017

வ.உ.சி.


..சிதம்பரனார் பிறந்த நாள் இந்நாள்! (1872) விடுதலை போராட்ட வரலாற்றில் இத்தமிழன் செய்த தியாகத்துக்கு நிகர் இவரே! இவர் தியாகத்தில் நூற்றில் ஒன்று செய்த பார்ப்பனர்கள் எல்லாம் கவர்னர் ஜெனரல் வரை பதவி வகித்தார்கள் - அவர்களின் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம் பெரிய பெரிய உத்தியோகங்களை அலங்கரித்தார்கள். உண்மைத் தமிழன் - உண்மைத் தியாகி ..சியோ தியாகம், வறுமை இவற்றோடு குடித்தனம் நடத்தியதோடு அல்லாமல், தன் வாரிசுகளுக்கும் அதையே சீதனமாகக் கொடுத்துச் சென்றுவிட்டார். ..சி. என்றால் கப்பலோட்டிய தமிழர் என்றுதான் பெரும்பாலும் தெரியும். அவர் எவ்வளவுப் பெரிய பார்ப்பனரல்லாத உணர்வாளர் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது.
இதோ ..சி. பேசுகிறார்:

பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமணரல்லாதாருடைய பொருள்களைக் கவருவதற்குத் தொன்றுதொட்டு செய்துவரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், தொல்லைகளையும், பிற பல தீய செயல்களையும் எடுத்துக்கூற வேண்டும். இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுக்களையும், ஆபாசங்களையும் அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகவும் பிராமணரல்லாதாரின் பொருள்கள் கொள்ளையிடப்படுவதையும் அக்கொள்ளைகளினின்றும், தாழ்வினின்றும் பிராமணரல்லாதார் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் விளக்கிக் கூறவேண்டும் ஞானசூரியன் என்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலுக்கு அளித்த முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ..சி. (7-10-1927).

இந்த முன்னுரை - ஞானசூரியனுக்கு மட்டுமல்ல - ..சி.யின் வாழ்க்கை வரலாற்றுக்குமான முன்னுரை என்றால் மிகையாகாது.

அம்மாபெரும் தலைவரின் தியாகம் இருட்டடிக்கப்படுகிறது. காரணம், அவர் தமிழராகப் பிறந்ததுதான்!

விடுதலை, 5.9.2001 

நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...