ஆரியர்கள் தங்கள் காரியங்கள்
சாதித்து ஆரியர்களுக்கு அவர்களது வாழ்வுக்கு வேத சாஸ்திர, ஸ்மிருதி சமய
ஆதாரமென்று சொல்லிக் கொண்டாலும்,
அவர்களது வாழ்வுக்கு வழிகாட்டியாகவே அவைகளும்
மற்றும் அவர்களது புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவைகளும் இருந்து வருகின்றன.
இப்புராணங்களைத் தான் தங்களது சமய ஆதாரங்களாகக் கருதி ஆரியர்கள் நடந்து
வருகிறார்கள்.
ஆரியப் புராண இதிகாசங்கள் ஒரு பெரும் சமூகத்தாரைச் சிறு சமூகத்தார்
எப்படி ஏமாற்றிப் பிரித்துச் சிறுபான்மையோராக்கித் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவது
என்பதற்கு ஏற்ற வரிகளேயாகும். அதைப் பின்பற்றி நடந்தே தான் இன்று ஆரியர்கள்
மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
எப்படி எனில், அப்புராண இதிகாசங்களில் ஒழுக்கம் இருக்காது; மானாபிமானம்
இருக்காது; நாணயம் இருக்காது; எவ்வளவு இழிவான காரியத்தையும் செய்து காரியத்தைச் சாதித்துக்கொள்ள
மார்க்கங்கள் இருக்கும். பத்தியமே கிடையாது. ஆனால், அவை மகா நீதியாகவும் நேர்மையாகவும்
உத்தமோத்தம ஒழுக்கமாகவும் பாசாங்கு செய்து கொள்ளும்.
உதாரணமாக, ஆரியர்களின் காப்புக் கடவுளான அல்லது தலைவரான இந்திரனை எடுத்துக்
கொள்ளுவோம். அவனிடத்தில் எங்காவது,
எப்பொழுதாவது, ஏதாவது ஒரு ஒழுக்கமோ, நாணயமோ
இருந்ததாகச் சொல்ல முடியுமா? மற்றும் அந்தப் பதவிக்கு வர முயற்சித்தவர்கள் எவ்வளவு அக்கிரமமான, இழிவான
காரியங்கள் செய்து தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளிப்படையாய்ச் சொல்ல
வேண்டுமானால், பெண்டுகளை விட்டுக் காமமூட்டி ஏமாற்றச் செய்யப்பட்டிருக்கிறது.
அதைப்பற்றி எல்லாம் எந்த ஆரியராவது வெட்கப்படுகிறார்களா? அதற்குப்
பதிலாகப் பண்டிகை அல்லவா கொண்டாடுகிறார்கள்.
ஆகவே, ஆரியர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்து; கொள்ள
இப்பேர்பட்ட மற்றும் எப்படிப்பட்டவுமான காரியங்களைக் கையாளலாம்.
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக