புதன், 2 ஆகஸ்ட், 2017

ஆரிய சமய ஆதாரம்


உண்மையில் ஆரியர்களின் சமய ஆதாரங்களில் பெரும்பாலும் எதைப் பார்த்தாலும் ஒரு மனிதனால் சொல்லப்பட்டதாகவோ, உற்பத்தி செய்யப்பட்டதாகவோ காண்பது முடியாததாயிருந்தும், ஒவ்வொரு ஆதாரத்துக்கும் அதன் கர்த்தா தெய்வத் தன்மை பொருந்திய வனாகவும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்த மில்லாத அற்புதச் சக்தி பெற்றவனாகவும் கற்பிக்கப்பட்டு இருப்பான்.

ஏனெனில், அப்படிக் கற்பிக்கப்பட்டதால்தான் அந்த ஆபாசப் புளுகுக் களஞ்சியங்கள் நிலை நிற்க முடியும். அப்படிக்கில்லாமல் சாதாரண மனிதனால் செய்யப்பட்டதென்றால், அது அவனுக்கு எப்படித் தெரியும். அது எப்படி முடியும் அத்தனை நாட்களாய் அவன் எப்படி இருந்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகள் பிறக்குமே என்கின்ற எண்ணத்தினால், எழுதினவனும் சொன்னவனும் தெய்வத்தன்மை பொருந்தியவனானதால், அவனால் எழுத முடிந்தது.  ஆதலால் அதைப்பற்றி யாரும் தர்க்கிக்கக்ப்படாது என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளச் சொல்லலாம். அதிலும் திருப்திப்படுவதற்கு முடியாத கஷ்டம் ஏற்படுகிற விஷயங்களாய் இருந்தால், கடவுளே சொன்னார், அசரீரியாய்ப் பேசினார் என்று தப்பித்துக் கொள்ள வசதியாயிருக்கும். ஆதலால் தான் ஆரிய சமய ஆதாரங்கள் முழுவதும் மனித சக்திக்கு மேம்பட்டவர்களால் சொல்லப்பட்டதாகவே அவற்றில் சொல்லப்பட்டு இருக்கும்.


(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...