20-ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுக்கு முந்தைய ஆண்டின் (1999இல்) கடைசிப் பகுதியில் உலகை உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வுதான் நேபாளத்தில் கடத்தப்பட்ட விமானம் - அதில் பயணம் செய்தவர்கள் அனுபவித்த கொடுமை!
எட்டு நாள்கள் மரணத் துன்பத்தில் வறுத்தெடுக் கப்பட்டனர்.
துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டால்கூட அந்த ஒரு மணித்துளியோடு கதை முடிந்து போயிருக்கும்.
ஆனால் மரணம் எப்பொழுது வரும்? துப்பாக்கிக் குண்டுகள் எப்பொழுது தங்களைத் துளைக்கும்? என்று எதிர்பார்க்கும் அந்த ஒவ்வொரு நொடியும்... அப்பப்பா... எவ்வளவுக் கொடூரமானது!
மனிதன் மிருகக் குணத்திலிருந்து விடுதலை
பெற்று விட்டானா என்றால் இல்லை. பல நேரங்களில் மிருகங்களைவிட கொடூரனாக அவன் நடந்து கொள்கிறான் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
வன்முறைகளால் காரியங்களைச் சாதிக்க முடியும் என்கிற மனப்பாங்கு வளர்வதற்குச் சம்பந்தப்பட்ட மனிதன் மட்டும் காரணமல்ல! நியாயங்களும், உரிமைகளும் அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற முடியாதபோது அதற்குரிய வெற்றிகளை ஈட்டாதபோது தலைக்கு விலை வைத்துத்தான் சாதிக்கமுடியும் என்கிற நிலை பல பிரச்சினைகளில் ஏற்படுவதும் உண்மைதான்!
இந்த நிகழ்வு அதற்குப் பொருந்தாமல்கூட இருக்கலாம்.
வன்முறைகள் வளராமல் இருக்க வேண்டுமானால் மனித குலம் அமைதித் தென்றலில் தாலாட்டுப் பாட வேண்டுமானால் வலுத்தவர்கள் ஆட்டிப் படைக்கும் அநாகரிகத்திற்கு முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக மகிழ்கிறோம்.
பல்வேறு நாடுகளும் பெரும் முயற்சியும் கவனமும் மேற்கொண்டுள்ளன. சிறைச்சாலைகளில்
இருந்தவர்களுக்கு விடுதலை
கொடுத்ததன் மூலம் பணயக் கைதிகள் விடுதலை பெற்றுள்ளனர்.
இவற்றையெல்லாம் அறவே மறந்துவிட்டு மறைத்துவிட்டு ஆண்டவன் அருளால் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் என்று விடுவிக்கப் பெற்ற பயணிகள் கூறுகிறார்கள் என்றால், அவர்களைப் பிடித்தாட்டும் இந்த அறியாமையை என்னென்று சொல்லுவது!
ஆண்டவனுக்கு அவ்வளவு ஆற்றலும், அருளும் இருந்திருந்தால்,
பயணக் கைதிகளாக ஆக்கப்பட்டு இருக்க மாட்டார்களே.
புத்தாயிரத்திலாவது புத்திக்கு வேலை கொடுப்பதில் மும்முரம் காட்டுவார்களாக!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
01.01.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக