ஜாதகம் ஒன்பது பொருத்தம் எல்லாம் பார்த்து கோவில் சந்நிதானத்திலேயே திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் எல்லாம் ஓகோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்;
பொருத்தம் பார்க்காமல், ஜாதி பார்க்காமல்,
இராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் அய்யோ என்று போய்விட்டார்கள் என்று சொல்லுவதற்கு இந்த சோதிடர்களிடமோ சங்கரமடங்களிடமோ ஏதாவது ஆதாரங்களும்,
புள்ளி விவரங்களும் இருக்கின்றனவா?
நல்ல நாள் பார்த்து சாஸ்திரோத்திரமாகப் பட்டம் சூட்டிக்கொண்ட காஞ்சி சங்கரர் ஜெயேந்திர சரஸ்வதியாரே ஒருவருக்கும் தெரியாமல்,
இரவோடு இரவாக மடத்தில் தண்டத்தையும் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டாரே! இராமன் பட்டாபிஷேகம் சூட்டிக்கொள்ள நல்ல நாள் பார்த்துக் கொடுத்தவர் திரிகால ஞானியாகிய வசிட்ட முனிவர்தானே.
அந்நாளில் இராமன் பட்டாபிஷேகம் சூடிக்கொள்ளாமல் காட்டுக்கல்லவா சென்றான்?
விடுதலை,
20.5.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக