ஆந்திர நாட்டில் சில ஜமீன்தாரர்கள் தங்களைத் திராவிடர் என்று
ஒப்புக்கொள்ளச் சம்மதிக்கவில்லை என்றும், தன்னைப் பொறுத்தவரை திராவிடனே என்றும்
ஒரு ஆந்திரப் பெரியார் தெரிவித்திருக்கிறார். இதில் நமக்கு அதிசயம் தோன்றவில்லை.
ஏனெனில், இங்கு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரே சதா சர்வ காலம்
தமிழன் ஆரியன் என்ற விவகாரம் பேசித் தமிழ் மக்களுக்குள் விளம்பரம் பெற்றுக்
கொண்டவர்களே!
ஆரிய புராணங்களை, ஆரியக் கடவுள்களின் புராணக் கதைகளை, அதிலும்அவமானமும் ஆன ஆபாசக் கதையைப்
பற்றி ஏதாவது கூறினால், கடவுளுக்குப் பெண்டுபிள்ளை, தாசி வேசி ஏதய்யா என்று கேட்டால், கோபித்துக்கொண்டு
ஆரியக் கதைகளுக்கும் கூத்துக்களுக்கும் தத்துவார்த்தம் பேசவரும் போது, இவற்றை அறியாத
ஒரு மனிதன் தன்னைத் திராவிடன் அல்ல என்று சொல்வதில் அதிசயமிருக்கக் காரணம் இல்லை.
ஆகவே, அப்படிப்பட்ட விவகாரக்காரர்கள் ஒன்று விலகிக் கொள்ளட்டும்; அல்லது
ஆண்மையுடன் வெளியில் வந்து வாதப்பிரதிவாதம் செய்யட்டும். இரண்டும் கெட்ட விதமாய்த்
தங்கள் பிழைப்பும் வாழ்வும் இதில் சிக்கிக்கொண்டு விட்டதே என்பதற்கு ஆக விஷமப்
பிரசாரம் வேண்டாம் என்றுதான் பணிவோடு வேண்டிக் கொள்ளுகிறோம்.
நிற்க, இந்தத் தேவைக்கு இப்போது என்ன அவசியம் என்று சிலர் கேட்கலாம். அதை
விளக்க வேண்டியது மிகவும் அவசரமான காரியம் என்பதை நாம் எடுத்துக் காட்டக்
கடமைப்பட்டிருக்கிறோம்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக