பிறகு இதற்கு இந்தியா என்றும், இந்தியர்கள் என்றும் பெயர் எப்படி
வந்தது? என்பதைப் பாருங்கள்.
இந்தச் சரித்திரத்தின் அடுத்த பக்கத்தில் பாருங்கள்; ஆரியர்களும்
அன்னியர்களும் திராவிடத்திற்கு ஆப்கானிஸ்தானத்தின் வழியாகவும், பிரம்மபுத்திரா
நதியைக் கடந்தும் வந்தார்கள் என்றும், அதனால் அவர்கள் சிந்தியர்கள் என்று
அழைக்கப்பட்டுப் பிறகு, அது இந்தியர்கள் என்று ஆகிவிட்டதென்றும், அதிலிருந்து
அவர்கள் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்பட்டு விட்டதென்றும், இந்தப் பெயர்கள்
ஆரியரல்லாதவர்களால் கொடுக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.
பிறகு ஆரியர்கள், திராவிடர்களைப் பலவிதத்தில் தொல்லை கொடுத்து, அவர்களை வடக்கே
இருந்து, தெற்குப் பக்கமாகத் துரத்தினார்கள் என்றும், திராவிடத்தின்
வடபாகம் எல்லாம் ஆரியர்கள் குடியேறிவிட்டார்கள் என்றும், அங்கு
எஞ்சியிருந்த திராவிடர்களையும், ஆரியர்களுக்குக் கட்டுப்படும்படி செய்து விட்டார்கள் என்றும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிதும் இந்திய சரித்திரமாக கலாசாலைப்
பாடப் புத்தகமாக இருக்கின்ற புத்தகங்களேயாகும்.
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக