திராவிட நாடு, ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும்
தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட
திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே
திராவிடர்கள் குரங்குகளாகவும், ராட்சதர்களாகவும் கற்பிக்கப்பட்டதோடு சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன்
என்பதுபோன்ற இழிமொழிகளுக்காளாகிச் சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு
நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதர்ம நீதி
வழங்கப்பட்டிருக்கிறது.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு தந்தை பெரியார்)
பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும், மற்ற
வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு.
(மனு அத். 11.379)
அந்தணன் பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றதால், ஒரு சூத்திரனைக் கொன்றதாய்ச் செய்ய
வேண்டி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
மனு அத். 9.132
வைதிகக் கருமமாயிருந்தாலும், லௌகீகக் கருமமாயிருந்தாலும் அக்கினி
எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ,
அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும்
அவனே மேலான தெய்வமாவான்.
மனு அத். 6.317
பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும், சகலமான
சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவன்;
அவன் மேலான தெய்வமாதலால்.
மனு அத். 7.318-19
கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய
தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது.
மனு அத். 8, 20
சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும்
அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால் கடவுள்
சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார். மனு அத். 8, 413
பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும்
பாவமென்றெண்ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில், அவனுக்குச் சொந்தமான
தொன்றுமில்லையாதலாலும், அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக் கொள்ளலாமாதலாலும்,
மனு அத். 8, 417
ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இருபிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால், அவன் நாவை
அறுத்தெறிய வேண்டும்.
மனு அத். 8, 270
அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால், பத்துவிரல்
நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்த வேண்டும்.
மனு அத். 8,27
அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றி
போதிப்பானானால், அவன் வாய்க்குள்ளும்,
காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படிச்
செய்வது அரசன் கடமை.
மனு அத். 8,.280
அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது
உயர்த்தினால், அவன் கையை வெட்டியெறிந்து விட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை
உதைத்தால், அவன் காலை வெட்டி யெறிந்துவிட வேண்டும்.
மனு அத். 7.272
தாழ்குலத்தான், உயர்குலத்தோடு சமமாக உட்கார எத்தனித்தால், அவனை இடுப்பிற்
சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அவன்
பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.
மனு அத். 7.281
அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால், அவன்
உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும்படிச் செய்யவேண்டும்.
மனு அத். 8.282
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக