புதன், 2 ஆகஸ்ட், 2017

மனு

பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும், மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு.   (மனு அத். 11.379)

அந்தணன் பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றதால், ஒரு சூத்திரனைக் கொன்றதாய்ச் செய்ய வேண்டி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
மனு அத். 9.132
வைதிகக் கருமமாயிருந்தாலும், லௌகீகக் கருமமாயிருந்தாலும் அக்கினி எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வமாவான்.      
மனு அத். 6.317

பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும், சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவன்; அவன் மேலான தெய்வமாதலால்.
மனு அத். 7.318-19

கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது.                                                      
மனு அத். 8, 20

சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால் கடவுள் சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார்.    மனு அத். 8, 413

பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும் பாவமென்றெண்ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில், அவனுக்குச் சொந்தமான தொன்றுமில்லையாதலாலும், அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக் கொள்ளலாமாதலாலும்,
மனு அத். 8, 417

ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இருபிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால், அவன் நாவை அறுத்தெறிய வேண்டும்.
மனு அத். 8, 270

அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால், பத்துவிரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்த வேண்டும்.                                                 
மனு அத். 8,27
அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றி போதிப்பானானால், அவன் வாய்க்குள்ளும், காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படிச் செய்வது அரசன் கடமை.                                                      
மனு அத். 8,.280

அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது உயர்த்தினால், அவன் கையை வெட்டியெறிந்து விட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை உதைத்தால், அவன் காலை வெட்டி யெறிந்துவிட வேண்டும்.                  
மனு அத். 7.272

தாழ்குலத்தான், உயர்குலத்தோடு சமமாக உட்கார எத்தனித்தால், அவனை இடுப்பிற் சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அவன் பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.                                                               
மனு அத். 7.281

அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால், அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும்படிச் செய்யவேண்டும்.

மனு அத். 8.282


நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு 

ஆசிரியர் : தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...