செங்கற்பட்டு என்றால் தமிழ்நாட்டின் முக்கிய நகரம் என்பதைவிட,
அவ்வூர் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு அங்கு நடைபெற்றதால் வரலாற்றில் பெருமைமிகு மணிமுடி தாங்கி செம்மாந்து நிற்கிறது!
(17,18-2-1929) இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அந்தக் காலகட்டத்தில் அந்த மாநாடு நடைபெற்ற முறையும், ஏற்பாடுகளும், ஆற்றப்பட்ட பொழிவுகளும்,
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் யாரையும் திகைக்க வைக்கத்தான் செய்யும்.
தமிழ்நாட்டு வரலாற்றில் மட்டுமல்ல; உலக வரலாற்றிலேயே இதுபோல ஒரு மாநாடு நடைபெற்று,
புரட்சிகரத் தீர்மானங்கள் இந்த அளவு நிறைவேற்றப்பட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்குச் சான்றுகளே கிடையாது. சென்னையிலிருந்து செங்கற்பட்டு வரை 36 மைல் தூரம் மோட்டார்களின் ஊர்வலம், வழிநெடுகத் தலைவர்களுக்கு வரவேற்பும் என்றால், அது சாதாரணமானதா?
மாநாட்டுக்கென்று தனி ரயில்கள் ஏற்பாடாம்,
தனி ரயில் நிலையம், தனி அஞ்சலகம் என்று அமர்க்களம்தான்! ஆம்! அம்மாநாடு வரலாற்றுத் திருப்பம் வாய்ந்த புரட்சிகர மாநாடாகும்!
மாநாட்டுக்குத் தந்தை பெரியார் விடுக்கும் அழைப்பில் ஒரு சிறு பகுதி இதோ! தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவை என்றோ, வேசி என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். பெண்களை விதவை என்ற முக்காட்டுக்குள் தள்ளி, கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விட்டு வேசிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களையெல்லாம் மாநாட்டுக்கு அழைக்கும் துணிவு யாருக்காவது வர முடியுமா?
பெண்களை விதவை என்ற முக்காட்டுக்குள் தள்ளி, கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விட்டு வேசிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களையெல்லாம் மாநாட்டுக்கு அழைக்கும் துணிவு யாருக்காவது வர முடியுமா?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
17.2.2002
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக