இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதுபற்றி இரு கருத்துகள் நிலவுகின்றன. இப்படி ஒரு நாளைக் கொண்டாடுவதால் ஒழுக்கம் கெட்டுப் போய்விடும் - இதனை அனுமதிக்கக் கூடாது என்று கூறுவோர் ஒரு சாரார். காதல் கெட்டதல்ல
- மனிதனுக்குத் தேவையான ஒன்றுதான் என்று கூறுவோர் இன்னொரு சாரார்! காதல் என்றால் கட்டிப்பிடித்துப் புரளுவதுதான் என்கிற எண்ணம் பொதுமக்களுக்கிடையே நிலவுவதற்குக் காரணம் - இன்றைய சினிமாதான்.
காதல் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது - நட்பு கொள்வது
- அதன்பின் திருமணம் புரிந்துகொள்வது என்கிற உயர் தகுதிப்பாட்டில் மொட்டிட்டு,
பூத்து,
கனிய வேண்டும். அது உள்ளத்தைப் பொறுத்ததல்ல - உடலைப் பொறுத்ததுதான் என்பது அசிங்கமானதாகும்.ஆண்
- பெண் கல்வி வளர்ச்சியும்,
அறிவியல் சாதன மலர்ச்சியும்,
ஒரு புதிய முகத்தை உலகிற்குக் கொடுத்துள்ள நிலையில் காதலைக் கெட்ட சமாச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதனை அங்கீகரித்துக் கொண்டு ஒழுங்குபடுத்துவதுதான் ஒழுங்கானதாக இருக்க முடியும்.
சிவசேனா போன்ற இந்துத்துவா அமைப்புகள் காதலர் தினத்தை வெறுப்பது - எதிர்ப்பது என்பதற்குக் காரணமே வேறு! காதல் புரிவதால் ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் நடைபெறும் ஒரு நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்துத்துவாவின் ஆணிவேராகிய வருணாசிரமத்திற்கு, ஜாதி அமைப்பு முறைக்கு இது வீச்சரிவாளாக, சம்மட்டியாக அல்லவா இருக்கிறது - அதனால்தான் இந்த எதிர்ப்பு!
அந்த இந்துத்துவா கூட்டத்திற்கு ஒரே ஒரு கேள்வி. காதல் என்ற தன்மையைக் கடந்த காமவிகாரம் என்கிற குட்டையில் வீழ்ந்து கட்டிப் புரளாத ஒரே ஒரு கடவுள் இந்து மதத்தில் உண்டா? அன்று கலைஞர் அவர்கள் சொன்னதுபோல்,
கற்பழிக்காத கடவுள் உண்டா? அறுபதனாயிரம் கோபிகாஸ்திரிகளோடு கிருஷ்ணன் லீலை புரிந்தான் என்பதைத்தானே இன்றைக்கும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் - அந்த யோக்கியன்தான் கீதையை அருளினான் என்று கதை அளக்கிறீர்கள்!
இந்த யோக்கியதையில் காதலை வெறுப்பதுபோல் பாசாங்கு செய்வது - ஏனோ?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
14.2.2002
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக