சென்னையில் பெருமாள்
(முதலி)
தெரு,
நாராயணசாமி
(முதலி)
தெரு,
காசு
(செட்டி)
தெருக்களில் உள்ள வியாபாரக் கடைகளில் குறிப்பாக வடநாட்டு மார்வாடிகளின் கடைகளில் பளபளக்கும் ஓர் உண்டியல் பளிச்சிடுகிறது. சதுரமான எவர்சில்வர் உண்டியல் - முன்பக்கம் கண்ணாடி - அதில் ஒரு பசு மாட்டுப்படம். இதனை இங்கே கொண்டு வந்து வைத்தவர்கள் யார் - யார் மூலம் இந்த ஏற்பாடு - இதன் பின்னணிக் கர்த்தாக்கள் யார் என்பது மர்மமாக இருந்தாலும், சங்கராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த ஏற்பாடு என்பது மட்டும் தெரிகிறது.
சென்னையில் ஆர்.எஸ்.எஸ்.,
இந்து முன்னணி, பி.ஜே.பி. வகையறாக்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதில் ஊற்றுக் கண்ணாக இருந்து செயல்படுபவர்கள்தான் இந்த உண்டியல் வசூல் திருப்பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள். உண்டியல் வசூல் மூலம்தான் இவர்கள் நிதி திரட்டவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பின் ஏனிந்த ஏற்பாடு என்றால், பொதுமக்கள் மத்தியில் ஒரு பிரச்சாரம் நடைபெறவேண்டும்.
பொதுமக்களின் பங்கையும் இதில் இணைக்க வேண்டும் என்பதுதான் இதற்குள் உள்ள தந்திரமாகும்.
பசுவை மய்யப்படுத்தி கடந்த காலங்களில் சங்கரமடங்களும், ஆர்.எஸ்.எஸ்.
வகையறாக்களும் இந்துத்துவாவுக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியதுண்டு.
பச்சைத் தமிழர் காமராசரைப் பட்டப்பகலில் தலைநகரிலேயே தீர்த்துக் கட்ட கத்தி தீட்டிய கூட்டமல்லவா இது; இப்பொழுது மீண்டும் பசுவதைத் தடுப்பு என்கிற ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறார்கள்.
மாட்டு மாமிசம் வெகுமக்கள் உணவு - உலகம் பூராவும் அதிக மக்களால் சாப்பிடப்படும் உணவு ஏராளமான தொழிலாளர்கள் இந்தத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உழைப்பாளிகளை,
வெகுமக்களை எதிர்த்து பிறவி முதலாளித்துவக் கூட்டம் போர்த்தொடுக்குமானால், அதனை எந்த வகையிலும் சந்திக்கத் தயார்! தயார்!
விடுதலை, 18.11.2000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக