புதன், 2 ஆகஸ்ட், 2017

டாக்டர் நாயர்

           
திராவிட இயக்கத்தின் கண்மணியாகிய டாக்டர் டி.எம்.நாயர் அவர்களின் நினைவு நாள் இன்று (17.7.1919). 1868 சனவரி 15இல் கேரளத்தில் கள்ளிக்கோட்டை மாவட்டம் கொடுவாயூரில் சி.சங்கரன் நாயர் - கண்மினி அம்மா இணையர்களுக்கு இளைய மகனாகப் பிறந்தவர்தாம் தரவாட் மாதவன் நாயர் என்ற நமது டாக்டர் டி.எம்.நாயர்.
கல்வி, பொருள் வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். 1894இல் எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றவர். காது, மூக்கு, தொண்டை (நுசூகூ) மருத்துவத் துறையில் நிபுணர். மருத்துவத் துறையில் உயர் படிப்பான எம்.டி. பட்டமும் பெற்றவர்! அத்தகைய பெருமகன் திராவிட இயக்கத்தின் தோற்றுநர்களில் ஒருவராகத் திராவிடர்களுக்கு கிடைத்தது - விலை மதிப்பில்லாப் பெரும் வாய்ப்புதான்!
சென்னை மாநகராட்சியில் துவங்கிய அவர்தம் பொதுப் பணி அன்றைய சென்னை மாநிலத்தின் வரலாற்றுக்கே திருப்பம் கொடுத்த திராவிட இயக்கத்தைத் தோற்றுவிக்கும் பெரும் பணி வரை முகிழ்த்தது! 1916ஆம் ஆண்டு தில்லி சட்டசபைக்கு ஒரு தேர்தல் (ஐஅயீநசயைட டுநபளைடயவஎந ஊடிரஉடை) இரண்டு இடங்களுக்கான போட்டி. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

டாக்டர் டி.எம்.நாயர், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, டி.என்.சர்மா, சி.விஜயராகவாச்சாரியார், என்.சுப்பாராவ் பந்தலு, சி.கருணாகரமேனன், நவாப் சையத் முகம்மது ஆகியோர் போட்டியிட்டனர். பார்ப்பன சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் நாயருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்கள். முடிவில் - வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியும், டி.என்.சர்மாவும் வெற்றி பெற்றனர்.
பார்ப்பனர்களைப் பற்றி நாயர் கொடுத்த ஒளி விளக்கு பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் என்பதாகும். ஐக லடிர டஉம றடைட மஉம லடிர. ஐக லடிர மஉம றடைட டஉம லடிரடாக்டர் நாயருக்கு தந்தை பெரியார் சூட்டிய புகழாரம் திராவிட லெனின்.


விடுதலை, 17.7.2000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...