திராவிடர்க்கு ஆதியில் என்ன சமயம் என்பது திட்டவட்டமாய்
விவகாரத்திற்கு இடமில்லாமல் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாய் இருந்தாலும், திராவிடருக்கு
முன் பின் பிறவியோ, பிறவியின் பயனாக மேல்,
கீழ் ஜாதியோ, ஜாதிக்கேற்ற உலகமோ, விக்கிரக உருவமோ, பல கடவுள்களோ, அக்கடவுள்களின்
முகத்திலோ, காலிலோ மக்கள் தோன்றியதோ முதலான கோட்பாடுகள் இருந்ததாகத்
தெரியவில்லை. ஆகவே, அவற்றைப் பொறுத்தவரை அவை சம்பந்தமான சமயமும் கடவுள்களும் சமய
நூல்களும் திராவிடருக்கு உடன்பாடானவை அல்ல என்பதும் உறுதியான உண்மையாகும்.
ஏனெனில், இன்று திராவிடர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதும் பெரும்பான்மைத்
திராவிட மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் ஆரிய மதமாகிய இந்து மதம் என்று
சொல்லப்படுவதே ஆகும். அதுபோலவே திராவிடர்கள் கடவுள்களும் இந்துமதக்
கடவுள்களேயாகும். சமுதாயத்துறையிலும் திராவிடர்கள் பின்பற்றுவது இந்து
சமயமுறையேயாகும்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக