இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 14 வயது நிறைந்த
- திபெத்தின்
17-ஆவது கர்மப்பா (புத்த மதக்குரு)
- இமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் மூன்று சிலைகளைப் பார்த்து வியந்து போனாராம். முதன்முதலாக இத்தகு சிலைகளை அப்பொழுதுதான் பார்த்தாராம்.
அந்த மூன்று சிலைகள் ராமன், சீதை,
இலட்சுமணன் ஆகும். இந்த சிலைகளைப் பார்த்து அவர் வியந்ததற்குக் காரணம் எதுவாக இருக்க முடியும்?
மனித உருவில் இருந்தும் - நீலவண்ணனாக இருக்கிறானே இராமன். இவன் என்ன ஓர் அதிசய விலங்கோ என்று நினைத்திருக்கலாம்.
நமது பகவான் புத்தர் அன்பையும்,
அறத்தையும் போதித்தார். ஆட்டுக் குட்டியிடத்திலும் அன்பைக் காட்டி, தன் தோளில் சுமந்தார்.
இந்த மனிதன் கையிலோ போர்ஆயுதமான வில்லும் -
அம்பும் இருக்கிறதே - இவர் எப்படி கடவுள் என்று போற்றத்தகுந்த உதாரணப் புருஷர் - என்றும் ஒருக்கால் எண்ணியிருக்கலாம்.
பவுத்தர்கள் திருடர்கள்
- நாஸ்திகர்கள்;
அவர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று கூறியதாகக் கேள்விப்பட்ட
அந்த இராமனை எதிர்பாராத விதமாகச் சிலை வடிவத்தில் பார்க்க நேர்ந்ததே என்று வியந்திருக்கலாம்.
இந்த இராமக் கூட்டம்தானே பகவான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து அவரால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கத்தை வெளியேற்றியவர்கள் என்ற நினைப்பு அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.
இவ்வளவு அழகாக இருக்கும் சீதையை - நிறைக் கர்ப்பிணியாக இருக்கும்பொழுது காட்டில் கொண்டு போய் விட இந்த மனுசனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ என்ற எண்ணங்கள் அந்தப் பிஞ்சு நெஞ்சில் அலை அலையாகப் பாய்ந்திருக்கலாம்.
ராமரைக் கேட்டும் படித்தும் நிறைய தெரிந்து வைத்துள்ளதாக கர்மப்பா கூறி இருப்பதிலிருந்து இவற்றை நாம் அனுமானித்துக் கொள்ளலாம் அல்லவா?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
04.03.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக