தொலைக்காட்சி என்பது உண்மையிலேயே தொல்லைக் காட்சியாகவே மாறிவிட்டது.
பெரும்பாலும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதையே உயிர்மூச்சாகக் கொண்டு அவை செயல்பட்டு வருகின்றன.
இதில் முதல் பரிசைத் தட்டிச் செல்லுவது
- திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்த சன்தான்!
மந்திர - மாயாஜாலங்கள் என்ன - திகிலூட்டும் சங்கதிகள் என்ன - நல்ல நாள் கெட்ட நாள் சங்கதிகள் என்ன... என்ன..
என்ன...
குழந்தைகள் முதல் முதியோர்வரை அவர்கள் மூளையில் மூடநம்பிக்கைகளை சாயம் ஏற்றும் காரியத்தில் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு வருகிறது! கிட்டத்தட்ட என்பதற்கு மேல் அக்கிரகாரமாகவே அது ஆகிவிட்டது! நண்டு சிண்டு நத்தாங்கூடுகள் அனைத்துமே அவாள்! அவாள்தான்!
அக்கிரகாரம்தானே
அதில் என்ன சந்தேகம்?
பெரிய பாப்பா,
சின்ன பாப்பா என்று ஒரு தொடர் நாடகம்! அந்த நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் பேசுகிறது - அய்யர் ஆத்துக் கல்யாணமா? அய்யங்கார் ஆத்துக் கல்யாணமா? சூத்திரா ஆத்துக் கல்யாணமா? என்று வசனம் பேசப்படுகிறது என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?
சூத்திரன் என்றால்,
ஆத்திரம் கொண்டடி! என்ற சுயமரியாதை இயக்கக் கொள்கையொலி ஒலித்த நாட்டிலே -
திராவிடப் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நிறுவனத்தில் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி இவ்வாறு சொல்லப்படுகிறது என்றால் இதைவிட வெட்கக்கேடு ஒன்று இருக்கமுடியுமா?
இதற்குமுன்கூட திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள்பற்றி நாடகம் ஒன்றில் ஒரு பார்ப்பான் கேவலமான வார்த்தையைச் சொல்லி வசனம் பேசினான்.
பார்ப்பனக் கலாச்சாரத்தின் புழுதிக் கூத்தாக சன் செயல்படுகிறது!
தந்தை பெரியாரால் மனிதர்கள் ஆனார்கள்; மான உணர்ச்சி பெற்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்! சிலர் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன்மான உணர்வு பெற்ற தமிழர்களின் கண்டனக் கணைகள் - கடிதங்கள் சன்னை நோக்கிப் பாயட்டும்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
30.12.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக