தமிழர்களின் திருநாள் என்று பொங்கல் நாளைக் கொண்டாடுகிறோம்.
உலகம் முழுவதும் அறுவடைத் திருநாள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழர்களின் திருநாள்தான் தைத்திங்கள் முதல் நாளிலே தமிழர்கள் கொண்டாடி வரும் பொங்கல்!
தமிழர்களின் பண்பாட்டுக்கு உகந்ததான இந்நாளைக்கூட ஆரியம் தன் கலாச்சாரப் படையெடுப்பை நடத்த சங்கராந்தி ஆக்கியதுண்டு.
தந்தை பெரியார் இயக்கம் அந்தப் பூச்சைப் போக்கி, தமிழர்களின் பண்பாட்டு நாளாகப் பறைசாற்றி பட்டிதொட்டியெல்லாம் பெருவிழாவாக எடுக்கச் செய்தது.
பொறுக்குமா பார்ப்பன
(பா)
ஜனதா ஆட்சிக்கு? மத்திய அரசுத் துறைகளில் குறிப்பாக அஞ்சல் துறைக்கு இவ்வாண்டு பொங்கல் நாளன்று விடுமுறை கிடையாதாம்.
போகிப் பண்டிகைக்கு விடுமுறையாம்! எப்படி இருக்கிறது?
தீபாவளிக்கு விடுமுறை கிடையாது என்று சொல்லுவார்களா?
கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் ஒரு முக்கிய தமிழர்களின் திருநாளுக்குக் கிடையாதாம்.
இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது.
தமிழ், தமிழன், தமிழினப் பண்பாடு என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே இந்தப் பார்ப்பனர்களுக்குக் கருவேல முள்ளாகக் குத்துகின்றன
- மனதை உறுத்துகின்றன! அதன் வெளிப்பாடுதான் ஆரிய ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் அஞ்சலகத் துறையில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை கிடையாது என்பதாகும்.
அஞ்சல் துறையில் இருக்கும் தமிழர்கள் குமுறுகிறார்கள்! ஆரியப் பார்ப்பனர்களோ மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள்!!
என்னதான் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் சூழ்நிலைக்கேற்பப் பம்மாத்துப் பாடினாலும்,
அவர்கள் யார்? அவர்களின் எண்ணங்கள் என்ன?
இதோ அறிஞர் அண்ணா கூறுகிறார்:
தமிழ்நாட்டில் பிறந்தும்,
தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும் தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும்,
பார்ப்பனர்கள் தமிழிடத்திலேயே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழி எனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.
(திராவிட நாடு,
2-11-1947)
என்றார் அண்ணா!
தமிழர் திருநாளைப் புறக்கணிப்பதிலிருந்து அது உண்மைதான் என்று தெரிகிறதா
- இல்லையா?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
11.1.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக