டிசம்பர் 20 - பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் சமுதாயத்தின் திருப்பம் நிறைந்த பொன்னாள்!
இந்நாளில்தான் (1916) வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயர் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை அளித்தார்.
இந்த அறிக்கை எவ்வளவு சிறந்தது -
பார்ப்பனர்களிடையே எவ்வளவுப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு அடையாளம் -
அந்த அறிக்கை பற்றி மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடு எழுதிய தலையங்க வரிகளே போதுமானவை!
“It is with much pain and surprise that we persued the document” என்று இந்து குறிப்பிட்டது என்றால், பார்த்துக் கொள்ளலாமே! மன பாரத்துடனும்,
ஆச்சரியத் துடனும் அந்த ஆவணத்தை ஆய்வு செய்தார்களாம்! அப்பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை நாட்டு நலனுக்குக் கேடு விளைவிப்பது மட்டுமல்ல; தேச முன்னேற்றத்தின் எதிரிகளுக்குத் துணை போகக் கூடியது “Perilous to the National Cause என்கிற அளவுக்கு இந்து நஞ்சை மையாகப் பயன்படுத்தி எழுதியது!
சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை அன்றையப் பார்ப்பனர் ஆதிக்க நிலையையும், பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலையையும் படம் பிடித்துக் காட்டுவதாகும்.
1892 முதல் 1904
வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 16 பேர்களில் பார்ப்பனர்கள்
15 பேர்; சென்னை மாநிலத்தில் உதவி கலெக்டர்
140 இடங்களில் 77 இடங்கள் பார்ப்பனர்களுக்கே!
1913இல் மாவட்ட நீதிபதிகளுக்குரிய
128 நிலையான இடங்களில் பார்ப்பனர்கள் நங்கூரம் பாய்ச்சியது
93 இடங்களில்! இது போன்ற ஏராள புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
பார்ப்பனரல்லாதார் தாங்கள் இருக்கும் இடம் எது என்பதை உணர்த்தவும்,
உரிமை பெறவும், உணர்வு பெறவும் அவ்வறிக்கை பெருந்தூண்டுகோலாக இருந்தது.
சர்.பி.தியாகராயரும்,
டாக்டர் நாயரும், தாமும் இராட்சதர்களாக ஆக்கப்பட்டோம்! என்று தந்தை பெரியார் (விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 14-12-1950) கூறியதன் பொருள் மிகவும் ஆழமானது! பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் வேத,
இராமாயண காலத்திலிருந்து இந்தப் பட்டம்தானே!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
20.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக