செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கைத்தொழில்

3000, 4000 வருடத்துக்கு முந்தின தமிழ்நாட்டுச் சரித்திர இலக்கியத்தில் யுத்த விஷயத்தில் மனிதன் உதவி இல்லாமல் மதிற்சுவர்களே போரிட்டிருக்கின்றன. அதாவது மதில்மேல் இயந்திரப் பொறிமனிதன் நின்று கொண்டு ஈயக்குண்டுகளை வார்த்து வீசி எதிரிகள் மீது எறிவதும், இயந்திரங்கள் சரமாரியாய்க் கவண் கற்களை வீசுவதும் இயந்திர மனிதன் பறப்பதும், மயில் போன்ற ஒரு பொறியில் மனிதன் புகுந்து கொண்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து போவதுமான பல அரிய கைத்தொழில்கள் இருந்திருக்கின்றன. இவை சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை முதலாகிய பழங்காலத் திராவிடர் சரித்திர இலக்கிய இலக்கணங்களில் காணலாம்.

இவற்றை நாம் பாட்டி கதையாகக் கூறுவதாக யாரும் கருதிவிடக் கூடாது. ஏனெனில், பாட்டி கதை என்பது ராமாயணம், பாரதம், பெரியபுராணம், சின்னபுராணம், மச்சப்புராணம், தவளைப்புராணம் ஆகியவற்றில் வரும் தெய்வீக புஷ்பக விமானங்கள் அதாவது மனிதனுடைய அறிவு முயற்சி இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் நினைத்தபடி தானாகவே ஆகக்கூடியதும், ஆகாயத்தில் மறைந்திருந்து சண்டை போடுவதும் போன்ற மனோ கற்பனைச் சாதனங்கள் போன்ற கட்டுக்கதை அல்ல - அறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் ஏற்ற முறையில் ஒரு மனிதன் செய்தது இருந்ததாகவே சொல்லப்படுகிறது. இன்றும் பொறிகளால் அன்றி மக்கள் கையினால் செய்திருக்க முடியாது என்று சொல்லத் தகுந்த அனேக காட்சிகள் திராவிடத்தில் பிரத்தியட்சத்தில் பார்க்கலாம். இம்மாதிரியான காரியங்கள் இன்று வடநாட்டில் இவ்வளவு இருக்கிறதென்று சொல்ல முடியாது.

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...