வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சுயமரியாதை மாநாடு


சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு இதே நாளில் தொடர்ந்து இரு நாள்கள் (1929) செங்கற்பட்டு நகரிலே நடைபெற்றது. இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; இன வரலாற்றிலேயே ஒப்புவமை இல்லாத ஒரு திருப்புமுனை மாநாடு இது என்பதிலே இரு கருத்துகளுக்கு இடமே கிடையாது.அம்மாநாட்டுக் கென்றே தனியே ஒரு புகைவண்டி நிலையம் - வெள்ளுடை வேந்தர் பி.தியாகராயர் பெயராலும் தனி அஞ்சல் அலுவலகம், பனகல் அரசர் பெயராலும் ஏற்படுத்தப்பட்டன என்றால், மாநாடு எந்த அளவு விரிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மாநாட்டுத் தலைவர் .பு..சவுந்தரபாண்டியன்; முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன், .டி.பன்னீர்செல்வம், ஆர்க்காடு .இராமசாமி (முதலியார்) போன்ற பெருமக்கள் எல்லாம் கலந்துகொண்ட அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் எண்ணிக்கை 34. அவ்வளவும் அறிவுக் கருவூலங்கள்; எதிர்கால தமிழர் நலன் கருதி உண்டாக்கப்பட்ட வைப்பு நிதிகள்.

இன்றைக்கு நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான சட்டங்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்தது இந்த மாநாடுதான்.

ஜாதிப் பட்டங்களைத் துறத்தல், மதக் குறிகளை அணியாதிருத்தல், எல்லோருக்கும் கட்டாயக் கல்வி அளித்தல், எல்லாப் பொது இடங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி, புறம்போக்கு நிலங்களைத் தாழ்த்தப்பட்டோருக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும் வழங்குதல், பெண்களுக்குச் சொத்துரிமை, விதவைத் திருமண உரிமை, திருமண விடுதலை ஒற்றைப்பத்தி - 1 என்கிற முற்போக்கு புரட்சிகர எண்ணங்கள் அம்மாநாட்டில்தான் விதைக்கப்பட்டன.

அம்மாநாட்டின் இறுதித் தீர்மானம் முத்தாய்ப்பானது.

சமூக முன்னேற்றத்திற்கும், சமூக விடுதலை ஒற்றைப்பத்தி - 1க்கும் சுயமரியாதை இயக்கக் கர்த்தாவாகிய திரு..வெ.ராமசாமிப் பெரியார் அவர்கள் ஆற்றியுள்ள பெரும்பணிக்கு நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் இவ்வியக்கத்தில் தலைமை வகித்து நடத்துவதில் அவர்கள்பால் தங்களுக்குப் பூரண நம்பிக்கையுண்டென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

அந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதை நாடு இன்று உணர்கிறது - பெருமிதம் கொள்கிறது.

இவ்வாண்டு சுயமரியாதை இயக்கப் பவள விழா ஆண்டு - இயக்கத்தின் துவக்கக் காலகட்டத்தில் பல்வேறு சவால்கள் தோன்றின என்பதால், இயக்கத்தின் பவள விழா ஆண்டிலும் புதிய பல சவால்களைச் சந்திக்க இருக்கின்றோம். சமுதாய இயக்கம் என்று கூறி, பாசிச சக்திகள் திராவிட இயக்கத் தோள்களில் ஏறி வருகின்றன.தன்மானத் தமிழர்களே, உஷார்! உஷார்!!

செங்கற்பட்டு மாநாடு நடைபெற்ற இந்நாளில் இத்திசையில் உரக்கச் சிந்திப்போமாக!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 17.2.2000


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...