வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சமூகநீதி


1996ஆம் ஆண்டு இதே நாளில்தான் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குச் சமூகநீதி விருது அளித்து சிறப்பிக்கப்பட்டது.

தந்தை பெரியார் உருவாக்கிய அடித்தளத்தில் வலுவாகக் காலூன்றி சமூகநீதிக் காற்றை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் கொண்டு செலுத்திய ஓர் ஆற்றலுக்குப் பெயர்தான் வீரமணி.

மாநில அளவு என்கிற வட்டத்துக்குள்ளேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முடக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மத்திய அரசுத் துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யும் மண்டல் குழுப் பரிந்துரைகளை அமலுக்குக் கொண்டுவர 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்திய ஓர் இயக்கத்தின் தலைமைக்கும் - சாதனைக்கும் பெயர்தான் தமிழர் தலைவர் வீரமணி.

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதிக் கண்ணோட்டத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புரைகளால் தமிழ்நாட்டின் 69 விழுக்காடு - 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்ட நேரத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே அதற்கான ஒரு தீர்வைக் கண்டவர்  - கொடுத்தவர் தமிழர் தலைவர்.

அவர் கொடுத்த திட்டம்தான் இந்திய அரசியல் சட்டத்தின் 76-ஆவது திருத்தமாகப் பரிணாமம் பெற்றது.

இன்றைக்கும் அந்தச் சட்டம் சரியாகவே இருக்கிறது. அது தவறு என்று உச்சநீதிமன்றமே கூறவில்லை. ஆனால், சட்டவிரோதமாகக் கடந்த பல ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஆணை பிறப்பித்து வருகிறது.

பழைய ...தி.மு. அரசு உச்சநீதிமன்றத்தில் சரியாக வழக்கை நடத்தவில்லை. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய (31சி) சட்டத்தை எடுத்துக்காட்டியிருந்தால் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும் என்றெல்லாம் குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது.

இந்த தி.மு.. அரசில் அவற்றையெல்லாம் தக்க வகையில் எடுத்துக்காட்டிய நிலையிலும் உச்சநீதிமன்றம் அடம்பிடிக்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அது உயர்ஜாதி மன்றமாக இருப்பதுதானே!

நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்கிற திராவிடர் கழகத்தின் குரலில் உள்ள நியாயத்தை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கடந்த நிதிநிலை அறிக்கையிலே கூடத் தமிழக முதலமைச்சர் ஒன்றை அறிவித்தார். இட ஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்வதற்கான சட்டத் திருத்தம் குறித்துப் பேசினார்.

இன்னும் எவ்வளவுக் காலத்துக்கு இதனையே சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறார்கள்? அய்க்கிய முன்னணி, இன்றைக்கு தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிகளில் பங்கு கொண்ட ஓர் ஆட்சியே - விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை என்கிற தன்மையில் தள்ளாடுகிறதே!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 16.2.2000


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...