வியாழன், 3 ஆகஸ்ட், 2017

திருமாவளவன்


விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் விமானம் மூலம் இலங்கைக்குச் சென்றார். விமான நிலைய அதிகாரிகள் பார்வதி அம்மையாரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அவரை அனுமதிக்கவில்லை.

சென்ற விமானத்திலேயே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதனைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது. ஆயிரம் பேருக்குமேல் கைது செய்யப்பட்டனர்.

நிலைமை முற்றிப் போய் விட்ட நிலையில், இலங்கையில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரி சூலானந்த ஃபெரரோ கூறியுள்ள விளக்கத்தைக் கேட்டால் விலா நோகும்படி சிரிப்பை உண்டாக்குகிறது. தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று ஒருவன் கேட்க, புல் பறிக்கத்தான் என்று ஏறியவன் பதில் சொன்னானாம். அதைவிட படுதமாஷாக இருக்கிறது இலங்கை அதிகாரியின் பதில்.

திருமாவளவன் என்ன காரணத்துக்காக இலங்கை வந்தார் என்பதுபற்றிச் சரியாகச் சொல்லவில்லையாம்.

யாழ்ப்பாணப் பகுதியில் மீனவர்கள் கொந்தளிப்பாக உள்ளனராம். இந்த நேரத்தில் தமிழக அரசியல்வாதியான திருமாவளவன் அங்கு செல்வது விருப்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துமாம். அதற்காகத்தான் அவரை அனுமதிக்கவில்லையாம். வேண்டுமானால் பார்வதி அம்மையாரின் இறுதி நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கு கொள்ள இப்பொழுது அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளார்.

கேழ்வரகில் நெய் வடிகிறது என்று ஒருவன் சொன்னால் கேட்பார்க்குப் புத்தி எங்கே போச்சு என்ற ஒரு பழமொழி உண்டு.

பார்வதி அம்மையாரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் வந்திருக்கிறேன் என்று திருப்பித் திருப்பி விமான நிலைய அதிகாரிகளிடம் சொன்னதை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார் - திருமா. அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அந்த அதிகாரிகள்.
 ஆனால் உண்மைக்கு மாறாக அவ்வாறு எதையும் திருமாவளவன் சொல்லவில்லை என்று இலங்கை குடியேற்றத்துறை அ ஆனால் உண்மைக்கு மாறாக அவ்வாறு எதையும் திருமாவளவன் சொல்லவில்லை என்று இலங்கை குடியேற்றத்துறை அதிகாரி சொல்லுகிறார் என்றால் எந்த எல்லைக்கும் சென்று பொய் சொல்லத் தயங்காதவர்கள் அவர்கள் என்பது விளங்கவில்லையா?

துக்கம் விசாரிக்கச் செல்லலாமே தவிர, இப்பொழுது சென்று யாருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார், தோழர் திருமாவளவன்?
யாருடைய இறுதி ஊர்வலம் இலங்கையில் விரைவில் நடக்க உள்ளது? அதைச் சொன்னால் கொஞ்சம் நல்லது!


23.2.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...