அண்மையில் பா.ம.க.
சார்பில் நெற்றியில் நாமம் தீட்டி ஒரு வேடிக்கையான போராட்டம் நடத்தப்பட்டதல்லவா? அது பார்ப்பனர்களுக்கு நறுக்கென்று தேள் கொட்டி விட்டதாம்
- மூக்குக்கு மேல் நாமம் அணியும் இடம் வரை கோபம் பொத்துக்கொண்டு கிளம்பி விட்டதாம்!
வைணவ சமயத்தின் ஒரு புனிதச் சின்னமாகவும், பகவானின் பாதத்தைக் குறிக்கும் அம்சமாகவும் திகழும் நாமத்தை அர்த்தமற்ற முறையில் பயன்படுத்துதல் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகுமாம்!
இதன் பொருள்
- ஏமாற்றி விட்டான் என்பதுதானே!
வியாபாரம் எப்படி நடக்கிறது என்று கேட்டால் நட்டப்பட்டுக் கடையை மூடியவன் கூறும் வார்த்தை கோவிந்தா! கோவிந்தா!! இதன் பொருள் - நட்டப்பட்டு விட்டது என்பதுதானே!
சேஷாத்திரியோடு சேர்ந்து கூட்டு வியாபாரம் செய்தாயே என்னாச்சு என்று கேட்டால், அதை ஏன் கேக்கிற? குழைச்சிப் பட்டை போட்டுவிட்டான் என்கிறான்.
இதன் பொருள்
- மோசடி செய்து விட்டான் என்பதுதானே!
ஏமாற்றுதல், நட்டப்படுதல்,
மோசடி செய்தல் இவற்றிற்கு வெகுமக்களால் நடைமுறையில் புழக்கத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள்தாம் நாமம் , கோவிந்தா,
பட்டை இத்தியாதி... இத்தியாதி இந்து மத சம்பந்தப்பட்ட சொற்கள்! இந்து மதத்தின் யோக்கியதையைத்தானே இது அம்பலப்படுத்துகிறது.
முதலில் பொதுமக்களிடம் சென்று பார்ப்பனர் சங்கம் முறையிடட்டும்! அவர்கள் திருப்பி நல்லா பூசை போட்டாலும் போடுவார்கள்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
2.12.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக