அறிவியல் நன்கொடையான பத்திரிகைகள், ராசிபலன், சோதிடக் குறிப்புகளை வெளியிட கொஞ்சம்கூட வெட்கப்படுவதில்லை.
பொதுவாக இந்துத்துவாவில் அறிவு நாணயத்துக்கு எப்பொழுதுமே இடம் கிடையாது. பெரும்பாலும் வாக்குத் தவறுதல், ஒழுக்கம் கெடுதல் எல்லாம் இந்த மக்களிடத்தில் நிறைந்து வழிவதற்கே காரணம் இந்து மத அமைப்பும்,
அதன் கடவுள்களும், புராண இதிகாசக் கூற்றுகளும் ஒரு சார்பு சாத்திரக் கோத்திரங்களும், அவற்றின் தாக்கங்களும்தான்.
மோசடிக்கு இன்னொரு பெயர்தான் சோதிடம் என்பது. இன்றைய தினமணியில் சோதிடர் ராஜகோபாலய்யர்வாள் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்.
அண்ணன் இறந்துவிட்டார்; அண்ணன் மனைவியைக் கட்டிக்கொள்ள அவருக்கு ஆசை! அண்ணன் இறந்ததற்கே அண்ணியின் ஜாதகம்தான் காரணம் என்று அம்மா சொல்லுகிறாராம்.
இதற்கு விளக்கம் கேட்டு தினமணி சோதிடருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அண்ணியின் ஜாதகத்துக்கும், அண்ணனின் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அவரது ஆயுட்காலம் முடிந்தே மரணம் ஏற்பட்டது என்றும் பதில் கூறி தினமணியில் எழுதியுள்ளார்.
இந்திய மக்களின் இன்றைய சராசரி ஆயுள் காலம் 63.
50 ஆண்டுகளுக்குமுன் இருந்த சராசரி ஆயுளைவிட இது பெரும் அளவு வளர்ந்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? கல்வி வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி என்பது கோவணம் கட்டாமல் கோலி விளையாடும் சிறுபிள்ளைக்கும் தெரிந்த உண்மைஆயுள் காலத்தை நிர்ணயிக்கும் இந்த ஆண்டவன் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு இருக்கிறானா? அந்த ஆண்டவனை இந்த விஞ்ஞான ஆண்டவன் சாகடித்துவிட்டானா?
அம்மை என்றும்,
காலரா என்றும் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்து கொண்டு இருந்தார்களே
- அந்நிலை இன்று மாற்றப்படவில்லையா?
ஓர் இரயில் விபத்தில் ஆயிரக்கணக்கில் சாகிறார்களே
- ஒரு பூகம்பத்தில் இலட்சக்கணக்கில் மக்கள் மாண்டு மடிகிறார்களே - இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஆயுள் ரேகையா - ஒரே தலையெழுத்துத் தானா?
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக