ஈ.வெ.ரா.
தொடங்கி,
அண்ணாதுரை,
எம்.ஜி.ஆர்.,
கருணாநிதி,
ஸ்டாலின்வரை சீக்ரெட் ஆக சாமி கும்பிட்டுள்ளனர்.
கும்பிட்டு வருகின்றனர்! ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம் பார்க்கின்றனர்!
திராவிட நாத்திகக் கலாச்சாரம் எனத் தம்பட்டம் அடிப்பது எல்லாம் ஓட்டுச் சேகரிக்கவே!
- தினமலர், 2-12-2001 (வாரமலர்)
தினமலர் பார்ப்பன ஏட்டுக்கு இதுபோன்ற நச்சுச் செய்திகளைப் பரப்புவதில் தனி ஆனந்தம்!
தந்தை பெரியாரைப் பற்றியே இப்படி அவதூறுச் சேற்றைப் பரப்புவதன் மூலம் - இது ஒன்னாம் நம்பர் புளுகினி ஏடு என்பதைப் பொதுமக்களே புரிந்து கொள்ளப் போதுமானது. தந்தை பெரியார் ஒரு அப்பழுக்கற்ற நாத்திகர் - மனிதாபிமானி - பகுத்தறிவுப் பகலவன் என்பது, இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்ல
- உலகமே ஒப்புக்கொண்ட உண்மை. சூரியனைப் பார்த்து மின்மினிகள் சீட்டி அடித்து விடுவதாலேயே,
சூரியனின் மரியாதை குறைந்து போய்விடப் போவதில்லை.
தினமலர்களின் குரைப்பால் கதிரவன் கலங்கிவிடமாட்டான்.
தினமலர் பாணியிலே மற்றவர்களும் எழுத முடியாதா?
காஞ்சி சங்கராச்சாரியார் காலையில் எழுந்து தந்தை பெரியார் படத்துக்கு முன் தோப்புக்கரணம் போட்டுவிட்டுத்தான் பிறகு காமாட்சியம்மன் கோவிலுக்குப் போகிறார்.இரவில் மாட்டுக் கறி சாப்பிடாவிட்டால் அவருக்குத் தூக்கமே வராது - அதுவும் பசு மாமிசம் என்றால் அவருக்கு மிகமிகக் கொண்டாட்டம்
- படுஜோர்! தினமலர் அலுவலகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜையின்போது விளக்கமாறு, செருப்பு இவைகளை வைத்துப் பூஜை செய்தனர். இந்த இரண்டு பொருள்களும் மனிதர்களுக்குப் பயன்படும் முக்கியமான பொருள்கள் - ஆயுதங்கள் என்பதால் அவ்வாறு செய்தனர்.
இராமன் சுராபானம் குடித்தான் என்று வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதால்,
இராமநவமியன்று தினமலர் அலுவலகத்தில் தண்ணீர் வழிந்து ஓடியது - சங்கரமடங்களிலும் அதே நிலைதான் என்றும் கேள்விப்படுகிறோம்.
என்ன, தினமலரே! போதுமா
- இன்னும் கொஞ்சம் வேணுமா?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
7.12.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக