திராவிட நாட்டில் உள்ள வைணவர்கள் நாங்கள் ஆரியக் கடவளை
வணங்குகிறவர்கள் என்றும், சைவர்கள் நாங்கள் ஆரியக் கடவுளை வணங்குகிறவர்கள் அல்ல, திராவிடக்
கடவுளாகிய சிவனை வணங்குகிறவர்கள் என்றும், மற்றும் சிலர் நாங்கள் சிவனையும்
திருமாலையும் வணங்குகிறவர்கள் அல்ல,
முருகன் என்கின்ற இயற்கை அழகையும் இளமையும்
வலிவையும் குணமாகக் கொண்ட இயற்கையை வணங்குகிறவர்கள் என்றும், சிலர் எந்தக்
குணத்தையும் குறியாய்க் கொண்டு வணங்குகிறவர் அல்ல, கந்தழி என்கின்ற உருவம் குணம் இல்லாத
தூய்மையினை - தன்மையை வணங்குகிறவர்கள் என்றும் பல மாதிரி நம்மால் புரிந்துகொள்ள
முடியாத விஷயங்களை, ஏன் அவர்களுக்குமே சிலருக்குப் புரிந்திராத விஷயங்களை அந்தந்தச்
சமயத்தவர்களிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக வாயில் சொல்லலாம். திராவிடர்களை
ஆரியர்களுக்கு அடிமையாக ஆக்கி, அவர்களிடமிருந்து தப்பித்து வரமுடியாதபடி திராவிடர்களைப்
பிணைத்திருப்பது இந்து மதத்தைவிட இந்து மத ஆரியக் கடவுள்களேயாகும்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக