புதன், 2 ஆகஸ்ட், 2017

. பூணூல் மயம்


மதுரை வைத்தியநாத அய்யர்வாளுக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிடுகிறதாம். அவர்தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் காரணமாக இருந்தாராம். இதே ஆசாமிதான் 1922இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் கோவில் நுழைவுத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தவர் - இதை திரு.வி.. அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தீண்டாமை ஒழிய மனுதர்மத்தையும் இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது இந்தத் திருப்பூர் மாநாட்டில்தான்.
1946 மே-11இல் மதுரையில் நடைபெற்ற கறுப்புச்சட்டை மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்துக் கொளுத்த, பின்புலமாக இருந்த பார்ப்பனர்தான் இந்த வைத்தியநாத அய்யர்.
எப்படிப்பட்டவர்களை எல்லாம் பா... ஆட்சி தேடிப்பிடித்து நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது பார்த்தீர்களா?
சோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் - வெங்கட சுப்பிரமணியன் அய்யருக்கு மத்திய திட்டக்குழு உறுப்பினர் பதவி - மதுரை வைத்தியநாத அய்யருக்கு அஞ்சல் தலை - எந்தத் திசையில் மத்திய பா... அரசின் போக்கு இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள்!
காலமெல்லாம் ஜாதி ஒழிப்புக்கும், சமத்துவத்துக்குமாக எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
முழங்கால் சேற்றினில் முக்கி விதைத்தவன்
மூடச் சகோதரன் பள்ளப்பயல்
மூக்குக்கும் நாக்குக்கும் தண்ணீர்க் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே?
என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டவர் புரட்சிக் கவிஞர்.
அவருக்கு இந்நாள் வரை அஞ்சல் தலை வெளியீடு இல்லை.
ஆனால், ஜாதியையும், தீண்டாமையையும் காப்பாற்றுவதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸின் ஹெட்கேவருக்கெல்லாம் நினைவு போற்றும் அஞ்சல் தலை!
எவ்வளவுத் திட்டமிட்ட வகையில் இந்த ஆட்சி ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையுடன் பார்ப்பன இன நலக் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறது என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே - நமது வேண்டுகோள்!
இந்த ஆட்சிக்குத் தோள் கொடுக்கும் திராவிடக் கட்சிகளை என்ன சொல்ல?


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 9.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...