வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஒரு கலங்கரை விளக்கம்!


சிவகங்கை இரா. இராமசுப்பிரமணியம் பி.எஸ்ஸி., பி.எல்., அவர்களின் நினைவு நாளின்று! (24-3-1974) தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் தலைவராக இருந்து பார்ப்பனரல்லாத மக்களின் பாதுகாவலராக, கைதூக்கி விடும் ஏணியாக இருந்தவர்.

தந்தை பெரியாருக்கும், இயக்கத்துக்கும் மிகவும் வேண்டிய நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கக் குடும்பமான சிவகங்கைக் குடும்ப வழி வந்த சீரிய சுயமரியாதையாளர். அவரின் தந்தையார்தான் சிவகங்கை இராமச்சந்திரனார் (சேர்வை) செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானத்தை ஒட்டி ஜாதிப் பட்டத்தை வெட்டித் தூக்கி எறிந்தவர். வட்டக் கழகத் தலைவராக (கூயடரம க்ஷடியசன ஊயசைஅய) இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் செல்ல அனுமதி, பள்ளிகளில் கட்டாய சேர்க்கை போன்ற அடிப்படை சமூகப் புரட்சிப் பணிகளை - தந்தை பெரியார் வழியில் நின்று அழுத்தமாகச் செய்தவர்.

அவரின் அருமை மைந்தர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று நினைவு நாள் - தந்தை பெரியாரிடத்தும், தன்மான இயக்கத்திடத்தும் அவர் எந்த அளவுக்கு உறுதிமிக்க பற்றுள்ளவராக இருந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

மானமிகு இராம.சுப்பிரமணியம் அவர்கள் மாவட்ட முன்சீப்பாக இருந்தார். அதே நேரத்தில், தந்தை பெரியார் பெரிய குளம் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தார். பயணியர் விடுதியில் தங்கி இருந்த தந்தை பெரியாரை நீதிபதி இராமசுப்பிரமணியம் சந்தித்து மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்.

அப்பொழுது முதலமைச்சர் ஆச்சாரியார் பொறுப்பாரா? அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. என்ன பதில் கொடுத்தார்? பெரியார் எங்கள் குடும்பத் தலைவர். அவர் எங்கு வந்தாலும், சென்றாலும் அவரைச் சந்திப்பது - என் மரியாதையைத் தெரிவிப்பது என் கடமை - அதனைத் தொடர்ந்து செய்வேன்! என்று எழுத்துப்பூர்வமாகப் பதில் கொடுத்தார்.

மரணத்திற்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்திலும் தன் அருமை மகளை அழைத்து விடுதலை  தலையங்கத்தைப் படிக்கச் சொன்னவர்.

தந்தை பெரியார் மரணம் - அதனைத் தொடர்ந்து பித்தாய்ப் பெரியார் திடலில் அலைந்தவர்! அய்யா மறைந்து மூன்று மாதங்களில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

அதிகார பீடத்தில் சென்றாலும் தமிழர்கள் தந்தை பெரியாரையோ, அவர்தம் இயக்கத்தையோ மறக்கக் கூடாது என்பதற்கு இராம. சுப்பிரமணியம் ஒரு நினைவுக் கல்வெட்டு - கலங்கரை விளக்கம்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 24.3.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...