புதன், 2 ஆகஸ்ட், 2017

புரோகிதர் சோ!

கேள்வி: இடஒதுக்கீடு அளவை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என முதல்வர் கூறியிருப்பதுபற்றி?

பதில்: நியாயமான கோரிக்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படை மாநில அரசியல்வாதிகளுக்குப் புரிந்த அளவுக்கு மத்திய அரசியல்வாதிகளுக்குப் புரியாததுதான். எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு ஓட்டு இருக்கிறது என்கிற விவரம் அந்தந்த மாநில அரசியல்வாதிகளுக்குத் தெரிந்த அளவுக்கு, மத்திய அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையே?   - 08-12-99 துக்ளக் கேள்வி பதில்.

சோ. ராமசாமி எம்.பி.யின் பேனா இவ்வாறுதான் எழுதும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகத்தையே வில்லாக வளைத்து வக்கணையாக எழுதும் சோ அய்யர்வாளுக்கு ஒரு உண்மை தெரியவில்லையே! மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டே தவிர - மத்திய அரசுக்கு மக்கள் கிடையாதே!

எனவே, மாநிலத்தில் மக்கள் நிலையை முழுமையாக உணர்ந்தவர்கள் மாநில ஆட்சியை நடத்துபவர்களே! எனவே இட ஒதுக்கீட்டைப்பற்றி முடிவு செய்யும் அதிகாரம் அவர்களைச் சார்ந்ததே!

மத்திய பா... ஆட்சியில் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் இதை வலியுறுத்தியுள்ளன. பிரதமர் வாஜ்பேயும் இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு - சமூகநீதி என்று சொன்ன மாத்திரத்திலேயே இந்தப் பூணூல்களுக்கு ஏற்படும் இரத்தக் கொதிப்பு அப்பப்பா சொல்லுந்தரமன்று!

துக்ளக் இதழை காசு கொடுத்து வாங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த படித்த மக்கள்தான் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

உங்கள் மூலம் கிடைத்த சம்பாத்தியத்தைக் கொண்டே உங்கள் கண்களைக் குத்துகிறார்களே! என்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி நாம் வைக்கும் கேள்வி.

கல்யாண வீட்டில் பிள்ளை வளர்க்கும் மத்திய அரசியல்வாதிகளுக்கு சோ அய்யர்வாள்தான் புரோகிதரா?

எப்படிப்பட்டவர்களை எல்லாம் தட்டிப் பார்த்து மாநிலங்களவைக்கு மத்திய பா... ஆட்சி நியமனம் செய்துள்ளது என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்துகொள்வது அவசியம்!

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என்றால் மட்டும் பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கோதாவில் குதிக்கும் இந்தக் குடுமிகள் - கோவில் கருவறைக்குள் தங்களுக்கு மட்டுமேதான் ஒதுக்கீடு என்று வைத்திருக்கிறார்களே - அது எந்த ஊர் நியாயம்?

மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதிதானே?

விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 17.12.1999 

நூல் :  ஒற்றைப் பத்தி - 1

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...