ஞான சாகரம் பத்திராதிபர்
சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன்
சாரம்:
-
வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப்
பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக்கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக்
குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை
ஓட்டி, வடநூல்களின் ஊழலும்,
அவற்றின்கண் தமிழ் மக்களைப் பாழாக்குவதற்குப்
பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந்
திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை.
வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக்காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும்
தமிழுரைகளும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப்
பொருள் வாய்ந்தது.
சுவாமி வேதாசலம்
பல்லாவரம்
7.10.1927
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக