பிறப்பினால்
உயர்வு - தாழ்வு கற்பிப்பது திராவிட
மரபன்று; திருவள்ளுவர் முதலிய திரவிடத் தலைவர்கள்
பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை
பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும், நால்வகை ஜாதி இந்நாட்டில்
நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாசிரமக் கோட்டையை
இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார்.
முடியவில்லை. பின்னர் வந்த பற்பல
சீர்திருத்தவாதிகள் முயன்றனர்,
தோற்றனர். இராமானுஜரும் புரோகிதக் கொடுமையைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார்.
தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே
வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச்
சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின.
அத்தகைய
பலம் பொருந்திய ஜாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய
இதுவே தக்ககாலம். இதுவே தக்க வாய்ப்பு.
- 1917 இல் நடந்த சென்னை மாகாண
முதலாவது ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில்.
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக