விசுவ இந்து பரிஷத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.வி.ராகவலு விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் ஒரு தகவலைக் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் மார்ச் 12-ஆம் தேதிக்குப் பின் தொடங்கப்படும்.
இப்பணித் தொடங்கப்பட்டபின் நாட்டில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள மசூதிகளின் இடத்தில் பங்கு கேட்டு வழக்குத் தொடர்வோம் என்று கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்கதுதான். இது மசூதிகளுக்கு மட்டும் பொருந்துவதாக இருக்க முடியாதல்லவா? ஆக்கிரமிப்புச் செய்துள்ள எல்லாவற்றிற்கும் பொருந்துவதாகத்தானே இருக்கும்.
நடைபாதைகளில் எல்லாம் கோவில்களைக் கட்டியுள்ளவர்கள் யார்? நினைத்த இடங்களில் எல்லாம் கோவில்களை எழுப்பிப் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளவர்கள் யார்?
உண்டியல் வைத்து ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார்? வெகுதூரம் போகவேண்டாம்!
பெருநகரமான சிங்கார சென்னையில் எத்தனை எத்தனை ஆக்கிரமிப்புக் கோவில்கள்!
மிக முக்கியமான போக்குவரத்து நிறைந்த சைதாப்பேட்டை பகுதியில்
- மாதிரிப் பள்ளியையொட்டிய முக்கிய சாலையின் கால் பகுதியை கபளீகரம் செய்து விநாயகர் கோவில் எழுப்பப்பட்டுள்ளதே! செங்கற்பட்டு நகரில் முக்கிய சாலையில் ஆக்கிரமித்திருப்பது கோவில் மட்டுமல்ல; அர்ச்சகப் பார்ப்பனர் குடியிருக்க வீடும் அல்லவா கோயிலையொட்டி கட்டப்பட்டுள்ளது! இதற்கெல்லாம் எப்பொழுதுதான் பரிகாரம் கிடைக்கும்.இது இரண்டொன்று எடுத்துக்காட்டுகள்தான்.
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் தேறும். அரசு அலுவலக வளாகங்களுக்குள்ளும் காளான்கள்போல கோவில்கள் புழுத்துக் கிளம்பியுள்ளன!
சட்டத்துக்கு முன்னால் எல்லாம் சமம்தானே! எல்லாவற்றையும் சட்டப்படி தரைமட்டமாக்க வேண்டியதுதான்!சட்டத்துக்கு முன்னால் எல்லாம் சமம்தானே! எல்லாவற்றையும் சட்டப்படி தரைமட்டமாக்க வேண்டியதுதான்!
அந்த வகையில் விசுவ இந்துபரிஷத்தின் அகில இந்திய செயலாளரின் பேட்டியை வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
8.2.2002
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக