`தினமலர் என்ற பார்ப்பனர் ஏடு ``இது உங்கள் இடம் என்ற ஒரு பகுதியில் வாசகர் கடிதங்களை வெளியிடுவதாகக் கூறிக் கொண்டு, அவ்வலுவலகத்தில் உள்ள அம்பிகள் வலக் கையாலும், இடக்கையாலும், தம் மனம் போன போக்கில் கிறுக்கி எழுதிக் குவிப்பது வாடிக்கைதான்!
`தினமலரில் வரும் அதே கடிதங்கள், ஒரு எழுத்துக்கூட மாறாமல், அதன்
`காலைக்கதிர் நாளேட்டில் வெவ்வேறு பெயர்களில் வருவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது `விடுதலை. (19.6.2004 விடுதலை ஞாயிறு மலர்)
அதற்குப் பிறகாவது அதன் ரத்தத்தில் திருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; நல்லதற்குத்தானே ஒரு சூடு!
சாய்பாபா அவர்கள் நாட்டு நலப் பணிகளுக்காக நிதி உதவி செய்ததை வைத்துக்கொண்டு கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் அவ்வாறு செய்வதுண்டா என்று கேள்வி எழுப்பி, நாத்திகத்தை ஆத்திகம் வென்றது என்று, தன் முதுகைத் தானே புண் ஏற்படும் அளவுக்குச் சொரிந்துகொண்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதனை வரவேற்பது நன்றி பாராட்டுவது நாத்திகர்களின் தலைசிறந்த மானுடப் பண்பு என்பதற்கு அடையாளம் தான் முதலமைச்சர் கலைஞர் அவர்களே பாராட்டு விழாவில் பங்கேற்று நன்றியும் தெரிவித்ததாகும்.
ஒரு பக்கத்தில் நன்மையைச் செய்துவிட்டு, இன்னொரு பக்கத்தில் திருவான்மியூரில் ``அதிருத்ர மகாயாகம் என்ற பெயரில் உணவுப் பொருள்களையும், ஆடை அணிமணிகளையும் நெருப்பில் கொட்டி நாசப்படுத்திய மூடத்தனத்திற்குப் பல லட்ச ரூபாய்களைக் கொட்டியழுதுள்ளார்!
இந்தியாவில் இரவு உணவு இல்லாத மக்கள் மூன்றில் ஒரு பகுதி உள்ளனர் என்று ஒரு பக்கத்தில் அரசு புள்ளி விவரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கத்திலோ இந்தக் `கிரிமினல் நடவடிக்கைகள்
வெட்கப்படத்தக்கது அல்லவா!
நாத்திகத் தந்தையான தலைவர் பெரியார், தன் திரண்ட சொத்துகள் அனைத்தையும் அறக்கட்டளையாக்கி, அவை பொது நலனுக்குப் பயன்படும் வகையில் ஏற்பாடு செய்தாரே அவை எல்லாம் `தினமலர் பார்ப்பனக் கூட்டத்தின் கண்களுக்குத் தெரியவே தெரியாதா?
``ரமணரிஷி என்ற பார்ப்பனர் பக்தியின் பெயரால் திரட்டிய கோடிக்கணக்கான சொத்துகளைத் தன் அண்ணன் பிள்ளைகளுக்குத்தானே எழுதி வைத்தார்? துறவிக்கு ஏன் சொத்து என்று நீதிமன்றத்தில் கேட்டபோது, `நான் துறவியே அல்லன்! என்று ஓங்கிப் பல்டி அடித்தாரே மறந்துவிட்டதா? இந்த யோக்கியதை உள்ள ஒரு கூட்டம்தான் நாத்திகத்தை ஆத்திகம் வென்றது என்று வெட்கமில்லாமல் எழுதுகிறது!
1.2.2007 விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக