தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொல்லுகிறார் என்பது பற்றி காலஞ்சென்ற சர்.ஏ.டி.
பன்னீர்செல்வம் அவர்கள் 1939 இல் விளக்கி இருக்கின்றதை அருள்கூர்ந்து கவனியுங்கள்.
. . . திரு.
பனகல் அரசர் காலத்தில் தான் மருத்துவ இலாக்காவை வெள்ளையர்களிடமிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதன் பயன் என்ன ஆயிற்று என்றால், டாக்டர் ராஜன் (அய்யங்கார்) என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா
மந்திரியாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக்கிறேன் என்கின்ற பெயரால் ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பதவிகளில் 125 பதவிகளைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவிட்டு, 85 பதவிகளை மாத்திரம் தமிழருக்குக் கொடுத்துவிட்டு, 15 பதவிகளை மாத்திரம் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.
100க்கு 3 பேர் விகிதம் உள்ள பர்ப்பனர்களுக்கு 125 உத்தியோகங்களைக் கொடுத்திருக்கின்றார். இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியாக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக 3 பார்ப்பனர்களைத் திணித்து இருக்கின்றார். எப்படி இருக்கின்றது ஆட்சி? இவ்வித ஆட்சியை இனி நடத்த விடமாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதாகும்.

நான் இப்படிச் சொல்வதை ஆச்சாரியார் (முதன் மந்திரி) கொடுமை என்கிறார். ஆனால், தமிழர்களை இப்படி நடத்துவது எங்களுக்குக் கொடுமையாக இல்லையா?
குறிப்பு: மேற்கண்ட விஷயங்கள் 1939_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் திரு.
ஆச்சாரியார் ஆட்சி பெரியாரை 3 ஆண்டு சிறைப்படுத்தியதற்காக சென்னை எழும்பூர் ஏரியில், கூட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொண்ட கண்டனப் பொதுக் கூட்டத்தில் சர்.ஏ.டி
.பன்னீர்செல்வம் அவர்கள் பேசிய பேச்சாகும்.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக