சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர்கள் நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி டாக்டர் ராஜன் (அய்யங்கார்) சுகாதார மந்திரி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். இதற்கு முக்கிய காரணம் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தைச் சரிகட்ட வேண்டுமானால், வைத்திய இலாகாவிலுள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்து விட்டு, படித்துவிட்டு வரும்படியில்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்துவிடுவதன் மூலமும், கல்வி, சுகாதார இலாகாவில் சில சிக்கனங்களைச் செய்துவிடுவதன் மூலமும் சரிப்படுத்தி ஆக வேண்டும் என்பதாகும்.
காயலாவில் சாகப்போகும் ஒரு மனிதனைப் பிழைக்க வைக்க, எப்படி வைத்திய இலாகா உதவக்கூடுமோ, அது போலவே, காயலாவிலிருந்து பிழைக்கப் போகும் ஒரு மனிதனை சாகடிக்கவும் பயன்படலாம். இப்படிப்பட்ட ஒரு முக்கியமான இலாகாவில் கவுரவ வைத்தியர்களை - சம்பளமில்லாத ஆட்களை வைத்தால் மக்கள் எப்படிக் காப்பாற்றப்படக்கூடும். இத்திட்டத்துக்கு உள்நோக்கம் எல்லாம் பல பார்ப்பனர் டாக்டர் பரீட்சையில் பாஸ் செய்துவிட்டு, வேலையில்லாமல் இருப்பதை மாற்றுவதற்காகவே என்பதை 9-.1.-1938 குடிஅரசு இதழில் தெளிவாக விளக்கிக் காட்டியிருக்கிறது.
பொதுமக்களின் இரு கண்கள் போன்ற கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டிலும் கைவைக்க திரு.
ஆச்சாரியார் தவறவில்லை.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக