இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ்.
பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.
ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.
றறற.வசயனவைடியேட றளைனடிஅ. என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய...
(ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).
..... ..... .....
இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.
பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?
அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக
இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.
இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.
இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை பூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.
பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!
தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!
தந்தை பெரியார்.
1.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக